பக்கம்:தரும தீபிகை 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மன ந லம் 123

110. புனித மனமுடையான் புண்ணியவான் ஆகி இனிய நலங்களெலாம் எய்தி-மனித இனம் கண்கண்ட தெய்வமெனக் கைதொழுஉம் காட்சியினை விண்கண்டு நிற்கும் விழைந்து. (D)

இ-ள். சிக்க சக்தியுடையவன் புண்ணிய சீலனுய்ச் சிறந்து எண் னிய இன்ப நலங்கள் யாவும் எய்தி மண்ணவர் கொழுது பேண விண்ணவர் விழைந்து காண விளங்கி நிற்பன் என்றவாறு. இது புனித மனம் புதிய தெய்வம் என்கின்றது. மனம் தாய்மை யாகவே, அக்க மனிதனுடைய கருமங்கள் எல்லாம் கரும நலங்களாய்க் கழைத்து வருகின்றன. வாவே, புண்ணியவானுய் அவன் பொலிந்து விளங்குகின்ருன. அறத்தால் விளைகின்ற இன்பங்கள் யாவும் அவன்பால் எளிது வந்து சேரு கின்றன. அருளும் செயலும் இயல்பும் உயர்வும் கருதி மனிதர் அவனைத் தெய்வமாக உவந்து கொழுது பணித்து போற்று கின்ருர். வையத்தில் நிகழுகின்ற இத்திவ்விய நிலைமையை விழைந்து நோக்கி வானத்தவர் வியந்து கிற்கின்ருர் என்க.

விண் கண்டு விழைந்து நிற்கும் என்றது மனம் தாய்மையுடையவன் தெய்வக் தன்மை யடைந்து தன் பால் விாைந்து வருதலை எதிர் நோக்கி வானம்

உரிமையுடன் அவனை உவந்து கொண்டாடும் என்றவாறு.

அழுக்கு நீங்கித் தெளிந்த ஆடியில் ஆதவன் விளங்குதல் போல் மாசற்ற நல்ல மனத்தில் ஈசன் ஒளிர்கின்ருன் , ஒளிரவே அம்மனிதன் கேசு மிகுந்து திவ்விய மகிமையை அடைகின்ருன்.

“Blessed are the pure in heart: for they shall see God. ' (Bible) இருதயத்தில் சுத்தமுடையவர் பாக்கிய சாலிகள் ; கடவுளை அவர் கேரே காண்கின்ருர். ' என்னும் இந்த அருமை வாசகம் ஈண்டு அறிய உரியது.

மன நலம் உடையவன் இம்மையில் எல்லா நலங்களையும் அடைந்து மறுமையில் பேரின்ப நலனயும் பெறுகின்ருன் என்பதாம். அரிய பேறுகளுக்கு உரிய மூலம் உணர வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/130&oldid=1324701" இலிருந்து மீள்விக்கப்பட்டது