பக்கம்:தரும தீபிகை 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வாக் கு ந யம் 127

விழிக்கு ஒளிபோல் தொழிற்கு மொழி ஆகலின் அதன் வழியே கருமங்கள் யாவும் யாண்டும் ஒழுகி உலாவுகின்றன ; இம்மருமம் தெரிந்து உரிமை புரிக என்பதாம்.

பண்டமாற்றுக்குப் பணம் என உலக இயக்கத்திற்கு மொழி உரிமைபூண்டு உள்ளது. இவ்வுண்மையை நோக்கி வாத்கின்

நன்மையைத் தெளிந்து பொன் மணிகளாகப் போற்றி வாழ்க.

பேச்சு வழக் கக்காலேயே மனித சமூகத்தின் வாழ்வு ஓங்கி வருகின்றது ; அஃது இல்லையாயின் இரண்டு கால் விலங்கினங் களாய்க் கிாண்டு கிரிய நேரும் ஆகலால் அக்காட்சியைக் கருத்

77

■ * -- m + 通 H = # ■ து.ான்றி நோக்க மக்கள் எலாம் மாக்கள் என வநதது. உாை

மாறவே உயிர் மாறியது என்க.

மனித இனத்தை மகிமைப் படுக்கி இனிது புரத்து வருவது வாய்மொழியே , அத்தகைய வாக்கை வறிது பாழ்படுத்தாமல் உரிமை கூர்ந்து போற்றி உறுதி கலங்கள் பெறுக.

' வல்லியல் விலங்கினங்கள் வாய்பேசா வகையால் அன்றே புல்லிய இனங்க ளாகிப் புன்கண் உற் று.ழலு கின்ற நல்லியல் மனிதன் பேசும் நயத்தினல் உயர்ந்தான் அந்தச் சொல்லுயர் வடையின் அன்ன்ை தோற்றமும் உயருமன்றே. *

(வீரபாண்டியம்) அருமையாய் அமைந்துள்ள வாக்கைப் பெருமையாகப் பேணிப் பயன் உள பகர்ந்து நயன் அடைய வேண்டும் என்பது

கருத்து -

118. எண்ணங்கள் எல்லாம் இனிய மொழிவழியே

வண்ணங்க ளாகி வருதலால்-கண்ணகன்ற ஞாலம் இயங்கி கடந்து வருகின்ற மூலம் தெளிக முதல். (க.)

இ-ள்.

மனிதனுடைய எண்ணங்கள் மொழிகள் வழியே உருவங் களாய் வெளி வருகின்றன ; ஆதலால் விரிந்து பாங்துள்ள இந்த உலகம் இனிது இயங்கி வருகின்ற மூல நிலையை முதலில் நன்கு தெளிக என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/134&oldid=1324705" இலிருந்து மீள்விக்கப்பட்டது