பக்கம்:தரும தீபிகை 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திரும தி பிகை

இ-ள். மேலோர் சொல்லுகின்ற நல்ல திே மொழிகளை யாண்டும் விழைந்து கேள் ; நீ பேசுவதைச் சுருக்கி எங்கும் நாவடங்கி இரு ; எல்லாம் வல்ல கடவுள் உனக்கு இாண்டு செவியைக் கொடுத்து ஒரு வாயை மட்டும் உதவியுள்ள உண்மையை உணர்ந்து நன்மை தெளிந்து கொள்க என்றவாறு.

இது, நாவடக்கத்தின் நலம் கூறுகின்றது. உள்ளப் பண்புடைய கல்லோரிடம் நல்ல அறவுரைகளைக் கேட்டால், அறிவு நலம் பெருகும் அமைதி மருவும் ஆகலால் அவ்வுறுதி கலங்களை உவந்து கொள்ளுக. - யாண்டும் என்றது. செவ்வி வாய்க்க எவ்வழியும் கேள்வி வேண்டும் என்ற வாறு. நல்லது என்ற தல்ை பொல்லாதவற்றைக் கேட்க லாகாது என்பது புலம்ை.

நல்ல கேள்வி செவிக்கு உணவு என்றமையால் அஃது உயிர்க்கு உறுதியாயுள்ள உண்மை உணரலாம். இத்தகைய அரிய கேள்வியைப் பெரிதும் விரும்புக ; நீ அதிகம் பேசாதே.

'நாவிரைந்து சொல்வதை என்றும் சுருக்குக ’’

என்றது சொல்லின் அருமை பெருமைகளே எனுகி யுனா .

சொல் அறிவின் சாாம் ; உயிரில் ஊறி வருவது ; அதனைக் கண்ட இடங்களில் கண்டபடி வீசி விடலாகாது. காலம் அறிந்து, இடம் நோக்கி, கேட்பவருடைய நிலைமையை உணர்ந்து தகுதி யோடு பேசவேண்டும். அவ்வாறு பேசுவதே அறிவுடைக்கு அழகாம். காவடக்கமின்றி வீணே விரித்துப் பேசுதல் பேதைமை

Ш ІТ Lг б7 аўт 55 .

அதிகமாகக் கேள் ; சுருக்கமாகப் பேசு என்பது மனிதனது உடலமைப்பிலேயே உணர்த்தப்பட்டுள்ளது.

இறைவன் இரு செவியை ஈந்து, ஒருவாய் வைத்த உண்மை உணர் என்றது உல்லாசமான விைேத விளக்கம். உற=பொருங்க.

ஆண்டவன் உனக்கு இாண்டு காதுகளைப் படைத்து ஒரு : T&Tü) LL வைத்தது, கேள்வியை நீ எங்கும் மிகுதியாய்க் கேட்க லாம் ; பேச்சை, குறித்த இடத்தில் தகுதியாய்ப் பேசவேண்டும் என்பதை அறிவுறத்து தற்கேயாம். உறுதி நலம் பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/137&oldid=1324709" இலிருந்து மீள்விக்கப்பட்டது