பக்கம்:தரும தீபிகை 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 த ரு ம தி பி கை

தந்தேன் என்ருன். அவ்வாத்தால் இராமனைக் காட்டுக்குப் போகும்படி பணித்தாள் ; அப்பிள்ளைப் பிரிவால் அரசன் பதைத்து மாண்டான். ஆழ்ந்து நோக்காமல் உள்ளக் களிப்பால் உரைத்த ஒரு வாக்கால் உயிரும் மகனும் அரசும் இழந்தான் ஆதலால் சொற் சோர்வால் நிகழும் கேட்டிற்கு அவன் ஒர் காட்டாய் கின்ருன்.

காவைக் காத்து அருள்க =தவை புகா வண்ணம் சொல்லைப் போற்றி ஒழுகுக. கணித்து=உள்ளுற உணர்த்து.

செல்வம் ர்ேத்தி முதலிய அரிய ஊதியங்களும், பழி வறுமை முதலிய கொடிய கேடுகளும் ঙ্গতে சொல்லால் விளைந்துவிடும் ஆதலால் யாதும் வழுவுரு கபடி கூர்ந்து ஒர்ந்து தெளிந்து மொழி களை வழங்க வேண்டும். வாய்க்கு வந்தபடி சொல்லின் நோய்க்கு இட்மாம் என்க.

-- ஆக்கமும் கேடும் அதல்ை வருதலால் "يتي.

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (குறள், 642) சொற்சோர் வுடைமையின் எச்சோர்வும் அறிய.

(முதுமொழிக் காஞ்சி) சொற்சோர்வு படேல். (ஒளவையார்) சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே. (இனியவை நாற்பது)

சொல்லின் நலம்குறித்து வந்துள்ள இவற்றை ஈண்டு எண்ணுக. நாவை நன்கு பாதுகாக்கவேண்டும் என்பது கருத்து.

117. ஒர்ந்தினிய சொல்வார் உயர்ந்தோர் உணர்வின்றிச்

சார்ந்திழிவே கீழோர்கள் சாற்றுவரால்-தேர்ந்தமைந்த இன்னிசையை யாழ்கன் கிசைக்கும் இழிபறைதான் என்னிசையச் செய்யும் இசை. (எ) -

இ-ள். மேன்மக்கள் நல்ல உரைகளை ஆராய்ந்து இனிமையாகச்

சொல்லுவர் ; கீழ்மக்கள் இழிந்த மொழிகளை மனம் போனபடி ஈனமாகப் பேசுவர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/139&oldid=1324711" இலிருந்து மீள்விக்கப்பட்டது