பக்கம்:தரும தீபிகை 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. த ரு ம தி பி ைக

ஒத்த பிறப்பினன் ஆயினும் ஈனமொழிகள் ஆடுகின்றவன் இழிந்து படுகின்ருன் ; மானம் மரியாதைகளோடு பேசின் அவன் ஞானமுடையய்ை உயர்ந்து விளங்குகின்ருன். ஆகவே நாக்கு நலனே நீ நயந்து நோக்கி இனிய வாக்காளய்ை இசை மிகப் பெற்று நல்ல ஆக்கங்களே ஆக்கிக் கொள்ளுக.

தனக்கு அரிய பாக்கியமாய் அமைத்துள்ள வாக்கை மனிதன் கண்ணியமாகப் பாதுகாக்துப் புகழும் புண்ணியமும் விளைத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

118. புண்ணியநன் னிரர் புனிதவாய் நன்மொழியாம்

தண்ணமுதம் தங்துலகைத் தாங்குமால்-எண்ணிலிழி o மக்கள் வாய் தாம்பில் வருர்ேபோல் புன்மொழியே

கக்கி வருத்தும் கடுத்து. )ہےy(

இ-ள். புண்ணிய சீலர்களுடைய புனித வாய் இனிய மொழிகளை வழங்கி அமுகம் போல் உலகை ஆதரித்து அருளும் ; இழி மக்களுடைய வாய் ஈன மொழிகளைப் பேசி நஞ்சம் போல் துயர் விளைக்கும் என்றவாறு.

தரும குணசீலருடைய வாய் மொழியை அமுகம் என்றது அதன் சுவையும் பயனும் கருதி. உயிர்களுக்கு உவகையாய் உறுதி நலம் அருளி உய்தி கரும் என்பது உலகைத் தாங்கும்' என்றதால் அறியலாகும்.

பொய்த்தல் புறங்கூறல் முதலிய தீமைகள் படியாக தாய்மை யுடையது ஆகலான் புனிதவாய் என வந்தது.

நல் ாேர்=நல்ல கன்மையர். நீர்மை ஆவது அருள் நலம் கனிக்க உள்ளப் பண்பு. இப்பண்புடையார் வாய்ச் சொல் இன்ப நலம் சாங்து எவ்வுயிர்க்கும் இனிமை பயந்து நல்ல அறங்களை நல்கி அருளுதலால் தன் மொழி என நேர்ந்தது.

புண்ணியாது புனித வாய்மொழி இன்ன தன்மையது என முன்னுற அறிந்தோம். இனி, பாவகாரிகளுடைய படுமொழி

யையும் பார்க்க நே ர்கின்ருேம்.

எண்ணில் இழி மக்கள் = எண்ணத்தில் காழ்ந்த மனிதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/141&oldid=1324713" இலிருந்து மீள்விக்கப்பட்டது