பக்கம்:தரும தீபிகை 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போலி நிலை 141

பெற விழைகின்றன். அகல்ை நல்லவன்ப்ோல் நடிக்க முயல் கின்றன். போலியான அம்முயற்சியாளனை நோக்கி அவன் கருதிய உறுதிநலம் மருவியுள்ள இடம் உரிமையுடன் உணர்த்தியபடியிது.

உயர்ச்சி உன் உள்ளத் தாய்மையில் உள்ளது. கள்ள நடிப் பால் அதனேக் காண முடியாது; காட்சி தெளிந்து மாட்சி பெறுக.

_

124. புல்லர் களிப்போடு பொங்கி வழிந்தாலும் -

நல்லவர்போல் மேன்மைதனை நண்ணுவரோடபுல்லியகள்

மேலெழுந்து பொங்கி மிகுந்தாலும் நல்லாவின் பாலெழுந்த பண்பாமோ பார். (+)

இ-ள். புல்லர் மனக் களிப்போடு வெளியே மினுக்கி கிமிர்ந்தாலும் நல்லவரைப்போல் மேன்மையினை அடையார்; கள் மேல் எழுந்து வழித்தாலும் பால்போல் மதிப்புருது என்றவாறு.

புல்லர்=புன்மையான தன்மையுடையார். பொங்கி வழிதலாவது விண் பிலுக்காாய் யாண்டும் முக்கித் துள்ளுதல். வழிதல் என்றது சிறுமை கிலை தெரியவந்தது.

உள்ளப் பண்புடைய நல்லோர்கள் வெளிப் பகட்டின்றி அடங்கியிருந்தாலும் உலகம் அவரை உணர்ந்து மதித்து உவந்து போற்றும். பெரிய ஆடம்பாங்கள் செய்து அம்பர்கள் மினுக்கிக் திரிந்தாலும் அறிஞர்கள் மதியார்.

கள், புல்லர்க்கும் : பால், நல்லவர்க்கும் ஒப்பாம். உவமக் குறிப்பால் பொருள்களின் இ ய ல் புக ள் இனிது புலம்ை. புளிப்பேறிக் கள் பொங்கி வழிதல்போல் களிப்பு மீறி இழி மக்கள். எங்கும் பிலுக்கிக் கிரிவர் ; பால்போல் இனியாாய் மேலோர் யாண்டும் அடங்கி யிருப்பர்.

ஆவின் பால் என்றது பிறப்பின் பெருமையும் தாய்மையும் உனா வக்கது. ஆமோ ? என்றது ஆகாது என்றவாறு.

இழிந்த கள் போல் ஈனமாய் ஒழித்து போகாமல், நல்ல பால் போல் இனிமையாய் மனிதன் உயர்ந்து கொள்ள வேண்டும். என்பது கருத்து. so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/148&oldid=1324720" இலிருந்து மீள்விக்கப்பட்டது