பக்கம்:தரும தீபிகை 1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தரும தீபிகை


அருளில்லாத அறிவு கண்ணில்லாத குருடன் போல் கடையாய் இழிந்துபடும். எவ்வளவு பேரறிவுடையனாயினும் ஆருயிர்களிடம் அருள்புரியானாயின் அவன் பேரிழவுடையனாய்ச் சீரழிந்து போகின்றான். போகவே அந்த அறிவு பாழா யழிந்தது.

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.” (குறள், 315)

அறிவுக்குப் பயன் அருளே, அஃது இல்லையாயின் அவ்வறிவால் யாதும் பயனில்லை என வள்ளுவப் பெருக்ககை இவ்வாறு உள்ளுறவுணர்த்தி யுள்ளார். உண்மையை ஒர்ந்து உணர்க.

எங்கும் என்றது ஒத்த மக்களிடமட்டுமே யன்றிப் புழு பூச்சி எறும்பு முதலிய சிறிய பிராணிகளிடத்தும் உரிமையுடன் அருள் செய்ய வேண்டும் என்னும் பொருள் தெரிய வந்தது.

சிறந்த அறிவினையுடைய உயர்ந்த மக்கட் பிறப்பை அடைந்தவன் எல்லா உயிர்களிடத்தும் இரங்கி இதம் புரிந்து ஒழுகிய பொழுதுதான் பிறந்த பயன் பெற்றவனாய்ப் பெரிய பதவியை அடைகின்னான். மன்னுயிர்க்கு இரங்கிய அளவு தன்னுயிர் இன்னுயிராய் இன்பம் பெறுகின்றது.

முன்பு இருந்த என்றது ஆதியில் பரமனோடு உயிர் ஒன்றியிருந்த நிலைமையை. “என்று நீ அன்று நான்” என்றபடி பரத்துடன் தொடர்புற்றுள்ள பழமையை யுணர்ந்து கிழமை புரிந்து விழுமிய நிலையில் உளம் உயர்ந்து உய்க என்பதாம்.

பேராத = நிலை குலையாத. என்றும் குன்ருத இன்பநிலை என்க. பரனேடு ஆன்மா நேரான நிலையினது ஆதலால் “நேர் ஆம் மனிதன்” என நின்றான். முன்பு நேர் ஆயிருந்தவன் நிலை திரிந்தமையால் அத்தலைமையை யிழந்து இத்தரையிலிழிந்து இங்ஙனம் தாழலாயினான். இத்தாழ்விலிருந்து உய்யவேண்டுமாயின் யாண்டும் அருள் செய்ய வேண்டும் என்க.

உள்ளம் இரங்கி உயிர்களுக்கு இனியனாய் ஒருவன் ஒழுகி வரின் அவன் பேரின்பமுடையனாய்ப்ப் பெருமகிழ்வடைவான் என்பது கருத்து. அருள் வர ஆனந்தம் வருகிறது.


-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/15&oldid=1439511" இலிருந்து மீள்விக்கப்பட்டது