பக்கம்:தரும தீபிகை 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போ லி நி &av 145

அவம் பழுத்த பொல்லாத் தீமை. இம் மாயத் தீயர் காயத் தோற்றம் அவரையே காய்ந்து தாற்றும்.

என்னே கூட்டும்? என்றது யாதொரு நலமும் கூட்டாது ; அவர்க்கு இழவுதான் கூட்டும் என்ற படி. வேடதாரியைக் குருட் டுக் கண்ணுேடு ஒப்ப வைத்தது, அகம் இருட்டாய்ப் புறம்

மருட்டும் புன்மை நோக்கி.

குருட்டுக் கண்ணன் சி மி ட் டி விழி த் கா ல் சிரிப்பிற்கே இடமாம்; அதுபோல் ஒழுக்கம் இல்லாதவன் நல்ல வேடத்தை மேற்கொண்டு பிலுக்கி கிற்றல் இகழ்ச்சிக்கே ஏதுவாம்.

ஒளியுள்ள கண் இமைத்து விழித்தால் அழகாம்; குணம் உள்ளவன் கோலம் கொண்டால் நலமாம் என்க.

உள்ளத்தே சீலம் இல்லாமல் வெளியே நல்லகோலங்களைப் புனேந்து கொண்டு நல்லவர் என்று பிறர் நம்பும்படி சொல்லாலும் செயலாலும் நடித்து வருகின்ற பொல்லாத மாக்கள் மிகவும் அஞ்சத் தக்கவர் ஆதலால், புறப் பூச்சுக்காாாான அவ்வஞ்ச வேடரை கம்பற்க என்பது கருத்து.

==

"138உன்பால் உறுமுயர்வை ஒர்ந்துபிறர் பாராட்டின் R இன்பாம்நீ சொன்னல் இளிவாமே-பொன்புனைந்த

f

/ தன்முலேயைத் தன்கையால் தான்வருடின் ஒர்மங்கைக் -

குண்மலியின் புண்டோ வுணர். - )ہنعے(

= இ-ள். |

உன்னுடைய உயர் ல ங் க கள உலகத்தார் உணர்ந்து புகழ்ந்தால் இன்பம் ஆம் ; நீயே சொல்ல நேர்ந்தால், அழகிய மங்கை தன் கொங்கையைத் தானே வருடியதுபோல் கைப்புக்கே இடமாம் என்றவாறு.

இது, கற்புகழ்ச்சி தனி இகழ்ச்சியாம் என்கின்றது.

ஒர்தல்=பலமுறையும் கூர்மையாக ஆராய்ந்து உணர்தல். கூர்ந்து ஒர்ந்து தேர்ந்தவர் புகழ்வதே ஆன்ற மதிப்பாம். புகழ்த்து கொண்டாடல். தன்னைக் குறித்துப்= هة سيتي mسrبا பிறர் பெருமையாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்பது

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/152&oldid=1324724" இலிருந்து மீள்விக்கப்பட்டது