பக்கம்:தரும தீபிகை 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 த ரு ம தி பி கை

மனிதனது இயல்பான உயர் விருப்பம். அ ம் ம தி ப் பி ன் மோகத்தில் மதியினமாய் மோசம் போகின்ருன். அங்ங் னம் போகாதபடி இது போதித்துள்ளது.

போதனை எளிது தெளிவுற உவமை வந்தது. மங்கை என்றது பருவ நலம் கனிந்து கருணியாயுள்ள உரிமை யுனா.

பொன்=அழகு. பொன்புனைந்த என்றது அந்த இனிய உறுப்பின் இயல்புணர்த்தி கின்றது. வருடுதல் = இனிது பொதிந்து தழுவுதல்.

மங்கை, முலை, வருடல் என்னும் மூன்றும் மனிதன், உயர்வு, சொல்லல்களுக்கு முறையே இப்பாம். T

உள் மலி இன்பு உண்டோ? என்றது இல்லை என்றவாறு. மலிதல் = கிறைதல். பரிச விளைவு பாவச மாயது.

தன் கொங்கையை உரிய காதலன் வருடின் அம்மங்கைக்குப் பெரிதும் இன்பமாம். அவனுக்கும் நேரே பேரின்பமாகும்.

ஒரு மனிதனது உயர்வை அறிவுடைய பிறர் கூறின் இரு பாலார்க்கும் இனிய உவகையாம் ; அவ்வாறின்றித் தானே உாைத்தால், அது சுவைக் கேடாம்.

தன் பெருமையைத் கன் வாயால் சொல்வோன், தன்

முலையைத் தன் கையால் வருடும் மடமங்கை போல் இன்ப நலன் இழந்து இளிக்கப்படுவன். உவமையிலுள்ள விநய தயங்களை மதுணுகி உணர்ந்து பொருள் கிலையை ஒர்ந்து கொள்க.

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின், மைத்துனர் பல்கி மருங்தில் தணியாத பித்தன் என் றெள்ளப் படும், (நாலடியார், 340)

தன்னே வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் கன்னிர் சொறிந்து வளர்த்தற்ருல்-தன்னே வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

கயவாமை யன்றே நலம். (நீதிநெறி விளக்கம், 19)

இவை ஈண்டு எண்ணத் தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/153&oldid=1324726" இலிருந்து மீள்விக்கப்பட்டது