பக்கம்:தரும தீபிகை 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 த ரு ம தி பி கை

மலைச்சாாலில் உதிர்ந்து கிடக்கின்ற சிங்கப் பற்களை வாயில் ஒட்டவைத்துக்கொண்டு சில நாய்கள் புலிமுன் குலைப்பதுபோல், கலைச்சாரலில் சிதறி யுள்ள சில வுரைகளை வாய்ப்பாடம் செய்து கொண்டு மேதைகள் முன் பேசிப் பேதைகள் பிழைபடுகின்றனர்.

வெற்றியுறு கோளரிப்பல் வீழ்ந்த சில கொண்டுநாய் கொற்றப் புலிமுன் குரைப்பொக்கும் குற்றமறக் கற்றவர்முன் முன்னுரல் உரைசில கற்ருர்போல் மற்றவர் கேட்டுாைக்கும் மாண்பு. ’’ (இன்னிசை யிரு நூறு

இப்பாட்டு இங்கே சிந்திக்கத்தக்கது. கானும் நன்கு கற்று மேலும் நல்லவர் வாய்மொழிகளைப் பெற்று ஞானம் படிந்திருக்கல் ஒருவனுக்கு நலமாம்: அவ்வண்ணம் உணர்ந்து படியாமல் உள்ளம் கருக்கி ஊனம்புரிதல் ஈனமாம் என்க.

130. கொண்டமடம் நீங்காமல் கோலமடம் மேற்கொண்டு

கண்டபடி செய்து களிப்பரோ-சண்டன் அணைந்தால் உறுவதனை ஆராய்ந்து சற்றே உணர்ந்தால் உளத்துள் உற. (ιδ)

ஆ-ள. எமன் வரும்பொழுது உறுவதைச் சிறிது கருதி உணர்ந் கால், உள்ளமடம் போக்காமல் உயர்ந்த மடங்களில் புகுந்து இழிந்த செயல்களை விழைந்து எவரும் களியார் என்றவாறு.

இது, போலித்துறவின் புன்மை புகல்கின்றது. கொண்டமடம் என்றது அகத்தே மண்டியுள்ள அறியாமையை. உண்மையை உணராமல் மூடமாயிருப்பது மடம் என வந்தது. கோலமடம் என்றது கருமங்லையமாய் அமைந்துள்ள அழகிய தவச்சாலைகளை. உலக நிலையை உணாாமல் ஒதுங்கி யுள்ளமையால் தவம் புரியும் இடம் மடம் என நேர்க்கது. உலக மடங்களை ஒழித்து, உள்ளமடங்களைக் கழிக்க, உயர் பாக்கை அறிதற்கு உரியதானமாயிருக்கும் அசிய கவப்பள்ளியை மடம் என்றமை

யால் அந்த நிலையத்தின் நிலைமையும் கலைமையும் இனிது புலம்ை.

அத்தகைய புனிகமான ஞானத்தானத்தை ஈனப்படுக்கிக் தவவேடம் தாங்கியும் அவவேடாய் ஒங்கி உழல்வது உலகிற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/155&oldid=1324728" இலிருந்து மீள்விக்கப்பட்டது