பக்கம்:தரும தீபிகை 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 த ரும தி பி கை

இது, பொய் கூறுவோர்க்கு ஒர் உய்தி கூறுகின்றது. ஒன்று என்றது புதிதாகப் புளுகைப் பழகத்தொடங்கும் இளமை கிலை கருதி. புகுந்த பின் அறிந்து பயன் இல்லை ஆதலால் புகுமுன்னே என எச்சரிக்க நேர்ந்தது. ஐயோ! என்றது பொய் யால் விளையும் வெய்யகிலைக்கு இாங்கி. =

வையம் எங்கும் கண் உடையான் என்றது கடவுளை. உலகத்திலே யாருக்கும் தெரியாது என்றுகருதி மனிதர் எதிாே பொய்யை நீ துணிந்து பேசுகின்ருய்; எங்கும் கிறைந்து எல்லா வற்றையும் நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்ற தெய்வம் இன் நிலையைக் கண்டு சிரிக்கின்றது; ஆதலால் தெய்வ தண்டனையை உணர்ந்து தீய பொய் மொழியை உடனே ஒழித்து விடுக.

கள்ளப்பொய்யைச் சொல்ல உள்ளம் துணியுங்கால் உடனே கடவுள் நேமே கண்டு கொண்டிருக்கிருாே! என்னும் உண்மையை எண்ணுக, அந்த எண்ணம் உனக்கு நன்மையை விளைக்கும்.

'செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்

பொய்தான் மிகவும் புலம்பு மனிதர்கள்

மெய்தான் உரைக்கில் விண்ணுேர் தொழச்செய்வன்

மைதாழ்ங் திலங்கு மிடறுடை யோனே. (திருமந்திரம்) இந்தச் செய்யுளை ஈண்டுச் சிந்தனை செய்து கொள்க. பொய் பேசின் செய்வ கோபம் உண்டாம்; அதனுல் வெய்யதுயர் விளையும் ஆதலால் அதனே அறவே ஒழித்து மெய் பேசி வாழ்க என்பது கருத்து.

184. பொய்யுரைக்கும் வாய்க்குநற் போசனமும் கிட்டாதென் றையோ உலகுரைக்கும் அச்சொல்லை-மெய்யாகக் கேட்டும் கெடுமதியர் கேடான பொய்யையே மீட்டும் புகல்வர் மிகுந்து. (*)

இ-ள். i. .

பொய் பேசுகின்ற வாய்க்கு நல்ல போசனம் கிடையாது

என்று உலகம் கூறி வருவதை உணர்ந்தும் மீண்டும் பொய்யே

பேசி மக்கள் மாண்டு போகின்ருர் என்றவாறு.

கெடுமதியர் என்றது கமக்கே படுகேடு விளைத்துவரும் அறிவு

கேட்டை நோக்கி. எல்லாம் வல்ல கடவுள் நேரே பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/161&oldid=1324734" இலிருந்து மீள்விக்கப்பட்டது