பக்கம்:தரும தீபிகை 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 த ரு ம தி பி கை

135. பொய்யரெனப் பேரெடுத்த பின்பவர்தாம் மெய்யினையே

செய்ய வகையாகச் செப்பிடினும்-ஐயகோ கன்றென்று கம்பாரே கம்புவரோ வேசையர்தாம் நின்ருலும் கற்பா கினே. (டு)

இ-ள். பொய்யர் என்று ஒருமுறை பேர்பெற்றவர் பின்பு எவ்வளவு மெய்யுரைகளைப் பேசினும் உலகம் அவரை கம்பாது ; ஒருநாள் வேசி யாடினவள் பின்பு கிறை வழுவாதவளாய் மருவி யிருங் தாலும் யாரும் கம்பார் என்றவாறு.

மனிதன் பேசுகின்ற பொய் எப்படியும் தப்பாமல் வெளி யாகிவிடுகின்றது; விடவே பொய்யன் என்று எல்லாரும் தெரிந்து கொள்ளுகின்றனர். அதன் பின் அக்கொள்கையை மாற்றுதல் அரிதாகின்றது. நல்ல நெறியுடையளாய் கின்ருலும் வேசையை மெய்யாக மதியாதது போல் பொய்யனேயும் வையம் ஐயமாய்

அவமதித்தே கிற்கும்.

' அரைக்காசுக்கு அழிந்திட்ட கற்பு

ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமோ நீ செப்பு: என்றபடி, ஒரு முறை உற்ற வழு உடலழியும்வரையும் ஒழியாது பற்றி இழிவு செய்கின்றது.

புனிதமான கா பொய்யால் புலைப்படுகின்றது ; படவே மனிதன் சேமான பழியடைந்து நாசமடைகின்ருன்.

வறியனுயினும் மெய் பேசுகின்றவனே உலகம் மதித்துப் போற்றுகின்றது ; செல்வனுயிருந்தாலும் பொய்யனே இகழ்ந்து தள்ளுகின்றது.

"பொய்யுளான் மறந்தோர் மெய்மை புகலினும் பொய்மையாகும்

உய்யுமா றென்றும் இல்லை. உறுதியென் பதும்சா ராச ; கொய்யுமா மலர்ப்பூஞ் சோலை சூழ்குவலயத்து சாளும் ாையுமா றெதுசெய் தாலும் பொய்ாவி லாமைவேண்டும்.'

(காசி ரகசியம்) பொய்யுடையானுக்கு யாண்டும் உய்கியில்லை ஆதலால் அவ்

வெய்ய தீமையை எவ்வகையினும் அனுகாதே என்பது கருத்து.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/163&oldid=1324736" இலிருந்து மீள்விக்கப்பட்டது