பக்கம்:தரும தீபிகை 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொய் i. 157

186. பொய்யனென்று சொன்னல் புகைந்து சினங்தெதிரே

வைய விரைந்து வருகின்ருர்-பொய்யதனைக் கூசாமல் வாய்பேசிக் கூடிக் குலாவுகின்ருர் ஆசாரம் என்னே அது. (சு)

இ-ள், - பொய்யன் என்று சொன்னல் எவனும் சினத்து வைய வருகின்ருன்; அத்தகைய வெய்ய பொய்யை மக்கள் விழைந்து பேசுகின்ருர், ஐயோ! இது என்ன ஆசாாம்? என்றவாறு.

உலகம் இயல்பாகவே பொய்யை வெறுக்கின்றது ; அப்படி யிருந்தும் அது எ ங் கு ம் பாத்து விரிந்து நாளும் பெருெ வருகின்றதே என மறுகிய படியிது. e

புகைந்து என்றது அவனது உள்ளக் கொதிப்பை உணர்த்தி கின்றது. ஒருவனைப் பார்த்து நீ பொய்யன் என்று சொன்னல் அவன் சகிக்க மாட்டான் ; சீறி எழுகின்ருன் ; சொன்னவனை மாறி வைகின்ருன். அதல்ை, பொய் மிகவும் இழிவானது : மனிதன் உள்ளுற அதனை வெறுத்துள்ளான் என்று தெரிகின்றது. இவ்வாறு ஈனமான பொய்யை மான மனிதர் காணுமல் பேசி வருவதும் ; அப்பிழையில் பெருகி நிற்பதும் அதிசயமாகின்றன. கூசாமல் என்றது கூ ச .ே வ ண் டி ய தி ல் கூச்சம் இல்லை என்றவாறு. அந்த சேப் பழக்கத்தின் கிலைமையை விளக்கியது.

ஆசாரம் என்னே அது ! என்றது இகழ்ச்சிக் குறிப்பு. சேமான பொய்யைப் பேசிக்கொண்டு உயர்ந்த மனிதர் GT G.лт உலகில் உலாவி வருவது மிகவும் இழிந்த பேதைமை யாம்.

" நீசனே சேன் கினையுங்கால் சொல்தவறும்

நீசனே நீசன் அவனையே-நீசப் புலேயனும் என்றுரைக்கும் புல்லியனே மேலாம் புலேயனும் என்றே புகல். ' (நீதி வெண்பா) பிறப்பில் எவனும் சேன் அல்லன் ; பொய் பேசுகின்றவனே சீசன் , இப் பொய்யனேப் புலையன் என்று உணராதவரே புலைய ாாகின்ருர் என இது குறிக்கிருக்கலறிக.

சேமான பொய்யைப் பேசலாகாது என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/164&oldid=1324737" இலிருந்து மீள்விக்கப்பட்டது