பக்கம்:தரும தீபிகை 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 த ரும தி பி ைக

137. மெய்யாம் அமுதம் விரும்பி நுகராமல்

பொய்யாம் விடத்தைப் புசிக்கின்ருர் சாகாமல் செத்த சவமாய் இருப்பதனே ஆகா அறியார் அவர். (எ)

இ-ள். மெய்யாகிய அமுகத்தை விழைந்து நகராமல் பொய்யாகிய விடத்தை உவந்து உண்ணுகின்ருாே அழித்த படுதலை அந்தோ! அவர் அறிய வில்லையே என்ற வாறு.

சத்தியத்தை அமுதம் என்றது உயிர்க்கு உறுதியாய் உயர்வு அருள்கின்ற அதன் இயல்பும் இனிமையும் கருகி.

தன்னைத் தொட்ட உயிர்களை சேப்படுத்தி நாச மாக்கி

ஐயோதாம் ,

விடுதலால் பொய் நஞ்சு என கின்றது.

நஞ்சைக் குடித்தவன் உடனே செத்து விழுகின்ருன்; பொய்யை வாயில் வைத்தவன் அங்ானம் சாகவில்லையே? எனின், உள்ளே ஈனமாய் அவன் அழிந்து தொலைக்கான்; வெளியே ஊனுடம்பயை வினே உலாவிக் திரிகின்ருன் என்க.

ஐயோ என்றது பொய்யின் இழ வறியாமல் கழுவிகின்று மனிதர் அகியாயமாய் அழிகின்றமைக்கு இாங்கி, உயிர் உடலை விட்டுப் போகாமலே செத்தவர் நிலைமையைப் பொய்க்கவர் பெற்று நிற்றலால் 'சாகாமல் செக்க சவம்' என அவரது விசித்திர இருப்பை விளக்கி கின்றது.

ஆகா என்றது வியப்பில் விளேக்க இாகக்குறிப்பு. மெய்யுடைய தாயர் அமிர்தம் உண்டவர்போல் யாண்டும் இன்பமும் மகிமையும் வாய்ந்து இனிது வாழ்கின்ருர்.

பொய்யுடைய தீயர் நஞ்சு குடிக் கவராய்த் துன்பமும் பழி பும் கோய்ந்து என்றும் துடித்து மாழ்கின்ருர். பொய்யின் தீமை தெளிவுற மெய்யின் மகிமை உடன் கூற நேர்ந்தது. கொடிய பொய்யை ஒழித்து இனிய மெய்யைக் கொள்க என்பது குறிப்பு.

இம்மை நலனழிக்கும் எச்சம் குறைபடுக்கும் அம்மை அருநரகத் தாழ்விக்கும்-மெய்ம்மை அறம்தேயும் பின்னும் அலர்மகளே நீக்கும் மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய், (சிறுபஞ்சமூலம்)

--_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/165&oldid=1324738" இலிருந்து மீள்விக்கப்பட்டது