பக்கம்:தரும தீபிகை 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 த் ரு ம தி பி ைக

139. ஓர்பொய் யுரைக்க உளம்கூசி ஒரரசன்

பாரரசெல் லாம்விட்டுப் பண்டுகின்ருன்-நேர்சிறிதும் நானமல் கோடிபொய்யை காவளைத்துக் கூறுகின்ருர் காணுர்கொல் அன்ன்ை கருத்து. (க)

இ-ள்.

ஒரு பொய் சொல்ல உ ள் ள ம் காணித் தனது அரசு முழுவதும் துறந்து முன்னம் ஒரு மன்னன் சத்திய சீலனுய் கிலைத்து கின்ருன் , அந்த உத்தமனது உண்ம்ையை ஒரு சிறிதும் உணராமல் நாளும் பல பொய்களைப் பேசி மக்கள் நாசம் அடை கின்ருாே என்றவாறு.

மெய் பேசுவோன் கடவுளைக் கானுவான் என முன்னம்

கூறியதற்கு இனமாக ஒர் இதிகாசம் இங்கே தெளிவுற வந்தது.

ஒர் அரசன் என்றது அரிச்சந்திானே. பேர் குறியாமல் உாைத்தது உலகப் பிரசித்தமான அவனது உயர் கிலை கருதி.

ஒர் என்னும் அடை, ஒப்பற்ற கனி கிலைமையை உணர்த்தி நின்றது. சத்தியசீலன் என அன்று முதல் இன்றுவ ை அவன் ஒருவனே தலைசிறந்து கின்று வருகின்ருன்.

பொய் பலவகைப்படும். உள்ளதை மறைத்துச் சொல்வது ; இல்லதை இசைப்பது நடந்ததை ஒளிப்பது ; நாகரீகமாய் கடிப்பது ; ஒரு பயனுமில்லாமல் இடம்பமாய்ப் புளுகுவது : சொன்ன சொல்லை மாற்றுவது ; இன்னவாறு பலவகை கிலைகளில் பொய் புலையாடி வருகின்றது.

இம்மன்னன் எங்கிலையிலும் யாதும் பொய்யிலனய் மெய்யே வடிவமாய் மேவி கின்ருன். உண்மையை உயிரினும் பேணி எவ்வகையிலும் வழுவாமல் அதனைப் பாதுகாத்து வந்தான்.

“There is a truthfulness in action as well as in words, which is essential to uprightness of Character. * (Smiles)

சொல்லிலும் செயலிலும் உண்மையா யிருப்பதே செவ்விய ஒழுக்கத்தின் திவ்விய உயிர் கிலே ' என ஸ்மைல்ஸ் என்னும் ஆங்கில ஆசிரியர்கூறியிருக்கிரு.ர்.மேல் நாட்டாரும் மெய்மையைப் போற்றியுள்ள முறைமை இதல்ை அறியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/167&oldid=1324740" இலிருந்து மீள்விக்கப்பட்டது