பக்கம்:தரும தீபிகை 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொய். 161

உயிரினும் சிறந்த ஒழுக்கத்திற்கு மெய் உயிாாயுள்ளது என்றமையால் அதன் இயல்பும் உயர்வும் இனிது புலம்ை.

இத்தகைய மெய்யை அரிச்சந்திரன் மெய்யாகக் கொண்டு கின்ருன். வசிட்டருடன் வாதிட்டு விசுவாமித்திார் இவன் நிலை மையைச் சோதிக்க வந்தார். சூழ்ச்சி புரிந்து அரசு முழுவதையும் கவர்ந்து கொண்டார். மன்னன் மணி முடி அறந்து மனே மகவுடன் அயல் நாடு போனன். முனிவர் தொடர்ந்து பொய்ய ளுக்க முயன்ருர் ; முடியவில்லை. மீண்டும் பெரும் பொருள் தரும்படி வேண்டினர். தனது அருமை மனைவியையும், இனிய மகனையும் விற்றுக் கொடுத்துத் தானும் ஒர் புலையனுக்கு அடிமை யாய் மயானம் காத்தான். இன்னல் பல அடைந்து இளைத்து நொந்தான். முடிவில் முனிவர் வந்து எதிாே கின்று, ' இப்பொழு தாவது நீ கொடுத்ததை மட்டும் இல்லை என்று ஒரு பொய் சொல்லிவிடுக; அரசும் பிறவும் பெற்று மகிழலாம்' என்று பேதித்தார். அப்பொழுது மன்னன் என்ன சொன்னன் : அரிச்சந்திரன் உரைத்தது.

சேய்மை அண்மையில் உயிர்க்கொரு துணையெனச் சிறங்த வாய்மை யாலகம் தூய்மையாம் ; மற்றிலே புறத்தைத் துாய்மை செய்வது நீர் அலால் சொல்லின்வே றுளதோ ? நோய்மை செய்யினும் வாய்மையே கோன்பெமக் கறிதி. (1) புலைய னும்விரும் பாதஇப் புன்புலால் யாக்கை கிலேயெ மைருண் டுயிரினும் நெடிதுறச் சிறந்தே தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வது தரியேம் கலை யுணர்ந்த எமக்கிது கமுறுவது அழகோ ? (2) இம்மை அம்மைவீ டெனமறை புலங்கொள இயம்பும் மும்மை யுக்தரு முறையுடைத் தெனுகிலே முரணி எம்மை யாழ்வயிற் றடக்கிமீட்டுமிழ்கலா எரிவாய் வெம்மை கூர்கர குய்க்கினும் மெய்மையை விடேமால். (3) பதி இழந்தனம் : பாலனே இழந்தனம் படைத்த நிதி இழந்தனம் : இனிகமக் குளதென கினேக்கும் கதி இழக்கினும், கட்டுரை இழக்கிலேம் என்ருன் : மதி இழங்துதன் வாயிமுங் தருங்தவன் மறைந்தான். (4) == (அரிச்சந்திர புராணம், மயானகாண்டம்)

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/168&oldid=1324741" இலிருந்து மீள்விக்கப்பட்டது