பக்கம்:தரும தீபிகை 1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாம் அதிகாரம் கு ற ளை . அஃதாவது பிறரைக் குறித்து மறைவாக இகழ்ந்து கூறுதல். இப்பழிமொழி இழிந்த புன்மக்கள் வாயில் விளைவது என்னும் உளவறியக் குறளை என வந்தது. குறள் =குறுகியது : உள்ளம் குறுகிய புல்லர் நாவின் பொல்லாச் சொற்கள் என்றவாறு. பொய்யைப்போல் வெறுத்து ஒதுக்கத்தக்கது ஆகலான் அதன் பின் இது வைக்கப்பட்டது. 141 இல்லென் றிரத்தல் இழிவாம் இரந்தவர்.பால் * / இல்லென் றுரைத்தல் இழிவிழிவாம்-கொல்வோர்கை வாளோ கொடிதிந்த வையகத்தில் புல்லியர்வாய்க் கோளே மிகவும் கொடிது. (க).

இ-ள். இல்லை என்று சொல்லிப் பிறரிடம்போய் ஒரு பொருளை இாந்து கிற்றல் இளிவு ; அங்கனம் இாந்து வந்தவர்க்கு இாங்கி உதவாமல் ஒழிவது அதனினும் இளிவாம் ; கொலைஞர் கையிலி ருக்கும் வாள் கொடியது ; அவ்வாளினும் புல்லர்வாய்க்கோள்ே மிகவும் தீயதாம் என்றவாறு. o

இது, கோளின் கொடுமை கூறுகின்றது. முயன்று வாழாமல் பிறரிடம் போய் இாந்து கின்ருல்மானம் கெடும் ஆதலால் அந்த ஈன கிலை இழிவு என வங்கது. வறுமைக் துயரால் மறுகி வந்தவர்க்கு உள்ளம் உருகி அருளாமல் இல்லை என்று சொல்வது பொல்லாத ஈனமாம். இழிவு இழிவு என்ற மொழி அடுக்கு அருவருப்பில் நிகழ்ந்தது. H

இாந்து திரிபவரினும் காந்தும் கிற்கும் ஈயா உலோபிகள் இழிந்தவர் என்றது மானம் மரியாதைகளை உணராத ஈனமுடை மை கருதி. இரத்தலும் காத்தலும் ஈனச் செயல்கள் ஆதலால் இங்கே ஈனச் சொற்களால் இழித்துக் கூற நேர்ந்தன. -

கொல்வோர் கை என்றது கொலையில் மூண்டு கிற்கும் அக் கிலைமை தெரிய. கொலைஞன் கையில் வாளோடு கண்ணெதிாே வருதலால் அவனை எதிர்த்துக் கப்பலாம்; அல்லது ஒதுங்கி விலகலாம். கோளில் அவ்வாறு மீள முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/171&oldid=1324744" இலிருந்து மீள்விக்கப்பட்டது