பக்கம்:தரும தீபிகை 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கு ற ளை 167

பாம்பு தேள்களினும் கோளன் கொடியவன் என முன்னம் கண்டோம்; அக்கொடுமையின் கிலைமையையும் காாணத்தையும் இதில் காண்கின்ருேம்.

கொடிய விடப் பாம்பு என்றது குக்குடசர்ப்பம், கருகாகம் விருசம் முதலிய கொடிய பாம்புகள்ை. தீண்டிய வுடனே மாண்டு படும்படியான நஞ்சுடைமையை அடைமொழி குறித்து கின்றது.

கொடியவிடம், கோளுக்கும், பாம்பு,கோளனுக்கும் ஒப்பாம். பாம்பு எவனைக் கடித்தகோ, அவனே மாத்திாம் கொல்லும் : கோளன் மறைவாக ஒருவனிடம் உரையாடி மற்றவரை மாய்த்து

விடுகிருன். கோட் சொல்லி ஆட் கொல்வி பாகலை அறிந்துகொள்க,

கோளன் என்னும் பேர் திச் சொல்லை எங்கும் கொண்டு செல்பவன்; தன் குறிப்பைப் பிறர் உள்ளங்கொள்ளக் கொளுவிச் சொல்பவன் என்னும் ஏதுவான் வந்தது. கோள் என்னும் சொல் பகை தீமை கொலை முதலியவற்றைக் குறித்துவரும். கொடிய இவன் என்றது கோளனே. சுட்டு அதிகாாத்தான் வந்தது. தீய வாய் ஒரு செவி அருகு போக அரிய உயிர்கள் பல மாயலாயின.

ஒருவன் காது ஒாம் இவன் வாய்வைக்கு முன்னே மற்றை யவன் மாயுமே ’’ என்றமையால் கோளின் கொலைத்தீமை புல ம்ை. நிலைமையை கினைந்து நோக்குக. ஐயகோ ! என்றது வெய்ய கொலையின் திகிலால் விளைந்தது. ஏகாரம் இாண்டனுள் முன்னது விாைவையும், பின்னது பரிகாபத்தையும் விளக்கி |கின்றது. விழி யறியாமல் வெங்கொலைகள் விளை கலை கினேங்து இாங்கியது.

பழிமொழிகளை வழியாகத் கொடுத்துச் சொல்லிக் கேட்ட வன் உள்ளம் உடனே கொலையில் மூளும்படிகோள்மூட்டிவிடுகின் முன் ; விடவே குறித்தவன் மாண்டு மடிகின்ருன்.

அரசன் காதில் பொற்கொல்லன் கோள்மூட்டக் கோவலன்

மாண்டதையும், அதனல் நேர்ந்த பல கொலைகளையும் ஈண்டு எண்ணிக் கொள்க.

தான் கிட்ட நெருங்காமலும், தன் கையால் ஒன்றும் செய் யாமலும் அயலே மறைந்து கின்று சொல்லாலேயே எல்லாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/174&oldid=1324748" இலிருந்து மீள்விக்கப்பட்டது