பக்கம்:தரும தீபிகை 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 த ரும தி பி கை

கொலைகளையும் செய்து விடுதலால் பல்லால் கொல்லும் அாவி லும் குறளன் பொல்லாக் கொடியனுயின்ை. 點

கடுங்காளத்தினும் கோளன் கொடுந்தீயன்; அக்கொடிய படு பாவியை அருகே அனுகவிடாகே என்பது குறிப்பு.

144. வில்லுக்கும் வாளுக்கும் வெய்யவடிவேலுக்கும்

கல்லுக்கும் தப்பிக் கடந்திடலாம்-டொல்லாத கோளன்வாய்ச் சொல்லின் கொடுமைக்குத் தப்பியிறை மீள முடியுமோ மேல். (ச)

இ-ள். வில் வாள் வேல் கல் முதலிய கொலைக் கருவிகளுக்கு எளிதே தப்பி உய்யலாம்; பொல்லாத கோளுக்குக் கப்பி உய்தல் அரிது என்பதாம். -

வில்லை முதலில் குறித்தது தொலையிலுள்ளவர்களையும் விாை வில் எய்து கொல்ல வல்ல அகன் வேகங்லை கருதி.

வெய்ய என்னும் அடையை மற்ற மூன்றுக்கும் கூட்டுக. வடி=கூர்மை. கடத்தல்=அபாயத்தினின்று நீங்குதல்.

போல்லாத கோளன் என்றது கொலை பாதகங்களை நிலையாக விளைத்து வரும் கொடுமை நோக்கி. பாம்பின் பல்லில் உள்ளது போல் அவனுடைய சொல்லில் நஞ்சுள்ளமையால் அவ்வாய்ச் சொல் திச் சொல்லாயது.

வேல் வாள் முதலிய படைக்கலங்கள் வெளிப்படையாகக் கண் எதிரே வருவன ஆதலால், ஆவன ஆற்றி அவற்றின் கேடு களுக்கு விலகிப் பிழைக்கலாம். கோள் யாரும் அறியாமல் ஊழ் வினை போல் உள்ளே உருத்து வருதலால் அதனே எதி மின்த விலக்குவது மிகவும் அரிதாம். --

மேல் மீள முடியுமோ? என்றது கோளின் தீமையிலிருந்து தப்பி யாதும் வாழ முடியாது என்றவாறு. இறை=சிறிது, கொஞ்சம். எதிாறிந்து பாதுகாக்கமுடியாமையால் கோள் எவ்வழி யும் குடிகேடு செய்தே விடும். இறை என்னும் குறிப்பால் பெருவலியுடைய அரசலுைம் கோள் வலியைக் கடந்து மீள முடியாது என்பது புலம்ை.

பெரிய போர் விானை இராமனும் கூனியின் கோளால் முடி துறந்து படாத பாடுகள் பட்டுப் பதைத்து உழக்கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/175&oldid=1324749" இலிருந்து மீள்விக்கப்பட்டது