பக்கம்:தரும தீபிகை 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மனிதனிலை

11


4. ஆரறிவு வாய்ந்த அருமை மனிதன்றன்
பேரறிவுக் கானபயன் பேசினோ-பேராத
வன்பிறவி மீள வராவழி முந்தேறித்
தன்பிறவி தாண்டலே தான்.

இ-ள்

சிறந்த மனிதனுடைய உயர்ந்த அறிவுக்குத் தகுந்த பயன் மீளவும் தான் பிறந்து உழலாமல் பிழைத்துக் கொள்ளுவதே. பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவதே உயிரின் உறவுரிமையாம்.

ஆர்தல்=நிறைதல். விலங்கு முதலிய பல பிராணிகளினும் மனிதன் நிறைந்த அறிவுடையன் ஆதலால் “ஆர் அறிவு” கூற வந்தது. பேரறிவு என்றது. பெருகி வந்துள்ள உரிமை தெரிய.

“மக்கள் தாமே ஆறறி வுயிரே" (தொல்காப்பியம்)

என ஆசிரியர் கொல்காப்பியனர் ஓரறிவு முதலாகக் கூறி வர்து மனிதனிடம் இங்ங்னம்.அறிவைப் பூர்த்தி செய்திருக்கிரு.ர். அருமை என்றது பெறுதற்கரிய பிறவியைப் பெற்றுள்ள பெருமையும் பெற்றியும் தெரிய நின்றது. பிறவிக்கு வன்மை யாவது எவரும் எளிதில் கடக்க முடியாதபடி பெருகி நிற்றல்.

பிறவி எவ்வழியும் பெருந்துயருடையது ஆதலால் அதனே அறவே நீக்குவது உயரறிவுக்குப் பயனாம் என்க. பேராத பிறவியைப் பேர்த்து எறிவோனே பிறந்த பயனை யடைந்த சிறந்த பேறாளன் ஆகின்றான். அல்லாதவர் அல்லல் நிலையில் ஆழ்கின்றார். .

எடுத்த பிறவிக்குப் பயன் அடுத்த பிறவியை அடையாதிருத்தலேயாம். ஆவதை அறிந்து அடைவதை விரைந்து கொள்ளுக.



5. தன்னை யறியத் தகவான மானுடம்போல்
என்ன பிறவியும் இல்லையே-இன்ன
பிறவியைப் பெற்றும் பெறும்பே றடையா
தறவொழிதல் அந்தோ அவம். (௫)

இ-ள்.

மனிதப் பிறவியே எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது; அத்தகைய அரிய பிறவியைப் பெற்றும் அதற்கு உரிய பயனைப் பெறாமல் வறிதே கழிந்து ஒழிவது பெரிதும் பரிதாபம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/18&oldid=1439903" இலிருந்து மீள்விக்கப்பட்டது