பக்கம்:தரும தீபிகை 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கொடுஞ்சொல். 177

கிலத்தில் கிடங்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல், (குறள், 959)

கிலத்தின் தன்மையை அதில் எழுந்த முளை காட்டும்; அது போல் குலத்தின் நன்மையை அதில் பிறந்தார் வாய்ச் சொல் காட் டும் என்னும் இது ஈண்டுச் சூழ்ந்து காணக்கக்கது. கால் = முளை.

சொல்லில் இனியார் துனியர் = வாய்ச் சொல்லில் இனிப்பு இல்லாதவர் வெறுப்புக்கு உரியராவர். துனி=வெறுப்பு.

அவர்க்கே துயர்=கடுஞ் சொல்லுடையவர் தமக்கே கொடுக் துயர் செய்தவராகின்ருர்,

வாய் தீயதாயின் வையம் வெறுத்து விடுகின்றது : விடவே, அவர் வெய்ய துயரில் வெய்துயிர்க்க நேர்கின்ருர்.

நீ உயர்ந்த மனிதனுக விரும்பின் யாண்டும் இழித்த மொழி களைப் பேசாதே; என்றும் இனிய சொற்களையே பழகி வருக.

153. சொல்லிடையே நஞ்சுகக்கத் துன்மதியர் சொல்லாடி

வல்லரென எண்ணி மகிழ்கின்ருர்-புல்லரிவர்

வாக்குச் சனியனென. வையம் எதிர்வையப்

போக்கிழிங் துள்ளார் புறம். (க.)

இ-ள்.

துன்மதியாளர் நச்சுமொழிகளை இச்சையுடன் பேசி இறு மாந்து களிக்கின்ருர் , அம்பான அவரை வாக்குச் சனியன் என உலகம் எள்ளி இகழ்ந்து அயலே தள்ளியுள்ளது என்றவாறு.

கெட்ட வழியில் தம் அறிவைச் செலுத்தும் பட்டிகள் துன் மதியர் என கின்ருர். நன்மதியர் நம்மை மதியாபே என்னும் மதியின்றிப் புன்மொழி யாடி வன்மையுடையாாய் மனங்களித்து மதிகேடர் மருண்டு திரிந்து திாண்ட பழியில்பு.ாண்டுஉழல்கின்ருர்,

நெஞ்சு பாழ்பட்ட வஞ்சமக்கள் மொழிக்கு மொழி எஞ்சு துளிக்க வெஞ்சொல் ஆடி வீணே பாழ்படுதலை கினேன்த பரிந்து அவர்க்கு ஊழறிவு ஊட்டிய படியிது.

நஞ்சு கக்க என்றது கேட்டவர் நெஞ்சம் கொதிக்கும்படி சேவார்த்தைகளைக் கூசாது பேசும் காசம் தெரியவந்தது.

- II를

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/184&oldid=1324758" இலிருந்து மீள்விக்கப்பட்டது