பக்கம்:தரும தீபிகை 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 த ரும தி பி கை

நஞ்சு என்ற குறிப்பால் அப்புன்சொல் உயிர் பதைக்கச் செய்யும் இயல்பறியலாகும். கக்க=உமிழ. வாய் உமிழிந்த சொல் நஞ்சு உமிழ்ந்துவரும் எனப் புல்லர் சொல்லின் புலை உணர்த்தி கின்றது.

சுடுமொழிகளை விநயமாகப்பேசிப் பிறரை வாயடக்கி மடக்கி விட்டோம் என மடத்தனமாகப் புல்லர் செருக்கி மகிழ்கின்ருர்; அவரை வையம் எள்ளி இகழ்த்து தள்ளிவைத்துள்ளதை ஐயோ s உனாவில்லையே! என்று அவரது அறிவுகேட்டைகினேந்து இசங்கிய வாறிது. போக்கு=குற்றம்.

வாக்குச் சனியன் என்றது கொடுமைக்கு ஒர் எடுத்துக்காட் டாக வந்தது. இராசி மண்டலத்தில் இரண்டாம் இடத்தில் சனி இருக் கால் அக்கச் சாதகனுக்கு எதம்பலகரும் ஆகலால் அங்கக் கொடுங்கோள் இங்கே கடுங்கோளனுக்கு உவமையாய் நேர்ந்தது.

கீழ்மகன், கெட்டவன், துன்பம் முதலிய பல கெடு பொருள் களையும் சனி என்னும் சொல் தொனியாகக் குறித்து கிற்கும்.

' என்னும் உலக

  • உனக்குச் சனியன் பிடித்திருக்கின்ருன் வழக்கிலும் அதன் நிலைமை அறியலாம்.

வாக்கில் தீயவன் வாக்குச் சனியன் என நேர்ந்தான். பிறரை இகழ்ந்து பேசாதே ; பேசின் உலகம் உன்னே ஈன மாக எள்ளி இகழ்ந்துவிடும் ; இவ்வுண்மையை உணர்ந்து கொள்க.

154. செருக்குமிகு பொல்லாச் சிறுவர்வாய்த் தீச்சொல் வெருக்கொள் விடத்தினும் வெய்தாம்-சுருக்காக அவ்விடத்தைப் போக்கின் அகலுமால் அத்தீச்சொல் எவ்விடத்தும் போகாதே எண். (#)

உள்ளச் செருக்குடைய பொல்லாச் சிறுவர் வாய்த்தீச்சொல் விடத்தினும் கொடியது ; அந்த விடத்தை மந்திரத்தால் போக் கலாம்; இந்தக் கொடுஞ்சொல் எவ்விதத்திலும் நீங்காது.

சிறுவர் என்றது பருவ நிலையைக் கருதி அன்று அறிவு பாழ் போய் வறிதுரையாடிச் சின்னத்தனமாய்த் திமிர்ந்து திரி யும் புன்மக்களைக் குறித்து கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/185&oldid=1324760" இலிருந்து மீள்விக்கப்பட்டது