பக்கம்:தரும தீபிகை 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 த ரு ம தி பி கை

இது, கொடுஞ்சொல் கொலே ஒக்கும் என்கின்றது. மறுகுதல்=நிலைகுலைந்து கவித்தல். எற்றுஎனும்=யாதாயினும். சிற்றளவு சொல்லினும் கொடிய குற்றமாம் என்க. சுடு சொல் படுதுயர் விளைக்கும்; அவ் வடுவுாை யை யாதும் வழங்காதே என்பதாம்.

கொலை என்பது உயிரை உடலிலிருந்து நீக்கிவிடுவது. இது, பாவங்களுள் தலைமையானது. கொலை செய்பவர் கொலைஞர்என கின்ருர்.

உடல் துடிக்க உயிர் பதைக்க வகைப்பது கொலையாம் ; கொடுஞ் சொல்லும் உள்ளம் பதைத்து உயிர் துடிக்கச் செய்த லால் அதுவும் கொலை என கின்றது.

உடலைவிட்டு உயிர் பிரிந்துபோதலால் கொலைத்துயரை உயிர் உடனே மறந்துவிடுகின்றது. புலைச்சொல் அங்ான மின்றி உடல் இங்கும் அளவும் உளத்தில் கிலையாக நிலைத்து உயிரை வகைத்து வருதலால் அக்கொலையினும் இப்புலையின்கொடுமை அறியலாகும். வாள் வேல் கொண்டு வெட்டிக் குக்கிக்கொல்வது மட்டும் கொலையன்று; வாய்கொண்டு கொடுஞ்சொற் சொல்வதும் கொடிய கொலையாம் என்க.

அது, உடற்கொலை ; இது, உயிர்க்கொலை. சக்திாவதை அது ; சித்திாவதை இது என நிலைமையை உய்த்துணர்ந்துகொள்க. விற்கொலை முதலியவற்றினும் சொற்கொலை தீயதாம்.

பொல்லாத கொலைப் பழியைச் சொல்லால் விளைக்காதே. பிறர் உள்ளம் கோகும்படி யாதும் பேசாதே என்பது கருத்து.

156.மன்றில் ஒருவன் மறுகி மனமுளைய

நன்றில் உரையை நவிலுகா-என்றுமே ஈனகா வாகி இழிந்து பின் பேசாத ஊனம் அடையும் உணர். m (சு)

இ-ள்.

பலர் குழுமிய சபையில் ஒருவன் உளம் மறுகி உளைய இழி

வுாை கூறுகின்ற நா பின் மொழி வழக்கு அற்று ஈனமான பிறப்

பில் இழிந்து படும் என்ற வாறு.

மன்று=பலர் கூடியிருக்கும் இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/187&oldid=1324762" இலிருந்து மீள்விக்கப்பட்டது