பக்கம்:தரும தீபிகை 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கொடுஞ்சொல். 181

நன்று இல் உாை=கெட்ட வார்த்தை. மனிதனுடைய மானம் கெடும்படியான ஈன மொழிகள். நவிலல்=சொல்லல். H தனியே இருக்கும்பொழுது இகழ்ந்து பேசுவதினும், பலர் நடுவே ஒருவனேப் பழித்துக் கூறின், அவன் உள்ளம் மிகவும் கொதிக்கும் ஆதலால் அக் கொடிய கிலைமை உணர வந்தது.

மறுகி உளைய என்ற தல்ை அந்த உயிரின் பாகவிப்பை அறியலாகும். அவையில் இகழப்படுதல் மிகவும் துயாமாம்.

எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதான் ஒருவன் ஒருவனே-வைய

வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் வியத்தக்கான் வாழும் எனின். (நாலடியார், 325) சபையில் ஒருவனே எள்ளி இகழ, அவன் உள்ளம் பொறுத் திருப்பாயிைன், இகழ்ந்து பேசினவன் அந்த இடத்திலேயே துள் ளித் துடித்து இறந்து படாமல் கின்ருல் அது ஒரு அதிசயமாம் என இது குறிக்கிருக்கும் குறிப்பைக் கூர்ந்து பார்க்க. மன்றில் பழிப்பது மா பாவம். அப் படுபாவி உடனே பொன்றி ஒழிய வேண்டும். ஒழியானுயின் தெய்வம் ஒளித்திருக்கின்றதே! என்று உலகம் வருந்தும் என்பதாம்.

இதல்ை பலர் முன் இகழும் பழிக் கொடுமை தெளிவாம்.

ஈன நாவாகி இழிந்து பின் பேசாக ஊனம் அடையும் ’’ என்றது கொடிய பழி மொழி கூறினவன் அப் பாவத்தால் பன்றி நாய் முதலிய இழி பிறவிகளில் விழுந்து பேச முடியாத ஈன நாவய்ை சேமுறுவன் என்றவாறு.

அரிய மனிதப் பிறவியை அடைந்து இனிது பேசக்கக்க உயர்ந்த நாவைப் பெற்றுள்ளாய்! பழி மொழியாடி அதனைப் பாழ் படுத்தாதே என உறுதி கலம் உணர்த்திய படியிது.

157. பொய்ச்சொல் புறஞ்சொல் புலையான புன் சொல்வாய்

வைத்தால் வசைமேல் வளருமே-மெய்ச்சொல்லே பேசக் கொடுத்த பெருநாவைப் பேணுமல் நாசப் படுத்தல் 5வை. (எ)

பொய் பேசல் புறங்கூறல் இழி மொழி பகர்கல் ஆகிய

இவற்ருல் பழிகள் வளருகின்றன; மெய்யே பேசும்படி கிடைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/188&oldid=1324763" இலிருந்து மீள்விக்கப்பட்டது