பக்கம்:தரும தீபிகை 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் அதிகாரம்.

குறும்பு. - அஃதாவது சின்னத்தனமாய்ச் சிறுமொழி பேசிச் சிலுகு புரிதல். குறுமகன் செய்கை குறும்பு என வந்தது. கோட் சொல் கொடுஞ் சொல்லுகள் போல் இதுவும் நெடும் பழி யுடை யது. விழுமிய மனிதன் எவ்வழியும் இதனைப் பழகலாகாது

என உணர்த்துகின்றமையால் ஈண்டு இது வைக்கப்பட்டது.

161 கண்ணும் முகமும் கருத்துரைக்கும் ஆன லும்

| திண்ணம் தெளியத் தெரிப்பதுதான்-கண்ணிவரு

சொல்லே அதனிலயைச் சூழ்ங்தே மனிதனிலே - (எல்லாம் அறிக எதிர்ங்து. (க)

இ-ள். மனிதனுடைய எண்ணத்தைக் கண்ணும் முகமும் வெளி அறியக் காட்டுமாயினும் அதன் உண்மை கிலையை வாய்ச்சொல்லே தெளிவாக உணர்த்தும் என்றவாறு.

இது, சொல்லின் பயனும் நயனும் கூறுகின்றது. திண்னம்=உறுதியான உண்மை; கிச்சயம். தெரிப்பது=தெளிவாகத் தெரியப்படுத்துவது. ஒருவனுடைய உள்ள நிலையை அறிதற்குக் கண் முகம் சொல் செயல் என்பன கருவிகளாய் அமைந்துள்ளன. கண் நோக்கம் எல்லாவற்றினும் மிகவும் துண்மையுடையது ஆகலின் அது முன்னுற கின்றது.

இந்த நான்கினும் யாரும் எளிதாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளுதற்குரிய கருவி சொல்லேயாம்.

  • எண்ணிவரு சொல்லே கிண்ணம் தெளியத் தெரிப்பது ” என்றது ஒருவன் வாயிலிருந்து வருகின்ற சொல்லே அவனுடைய மனநிலை குனலை முதலிய இயல்புகளை எல்லாம் வெளியே தெளி கீாக விளக்கிவிடும் என்றவாறு.

மனிதனே உள்ள படி அளந்துகொள்ளுதற்குச் சொல் நல்ல அளவுகோலாயுள்ளது ; அதனை நல்ல வகையாகப் பயன்படுத்திக் கொள்க என உரிமையோடு உணர்வு ைக்த படியிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/194&oldid=1324770" இலிருந்து மீள்விக்கப்பட்டது