பக்கம்:தரும தீபிகை 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 த ரு ம தி பி கை

மருகன்: இாண்டு கைகளும் உழைத்து வயிற்றுக்குத் தந்துவிட் டுத் தாம் ஒரு வேண்டாது இருத்தல்போல் நல்ல மேன்மக்கள் அரிய வினைகள் பலசெய்து பிறர் இன்புற உதவி என்றும் பரோபகாரிகளாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தற்காகவே இவ்வாறு அமைத்திருக்கிருர் ; இந்த அமைதியை உனாாமல் தங்கலமே கருதிப் படுலோபிகளாய் இழிந்து மனிதர் பலர் கீழ்மையாளராய்ப் பாழ்படுகின்றனர். இதனேக் கேட்டதும் மாமன் வாட்டம் அடைந்தான். தன்னைச் சுட்டியே கிட்டியுள்ளதைத் தெரிந்துவெட்கிப்போ னன். பிறரை நளினமாக இகழ்பவன் வலிமையாக எள்ளப்படுவான் என்பதை உலகம் அறிய இச்சரிதம் உணர்த்தி கின்றது.

169. சிறுமொழி யாடிச் சிலுகு புரியும் * வறுமொழி யாளர் வரினே-மறுமொழி

கூரு தகல்க குறுகின் பழிதுயர் வேரு விளையும் விரைந்து. o (க)

இ-ள். சிறு மொழிகளைப் பேசிச் சிலுகு புரிகின்ற வறுமொழியா ளசைக் காணின் மறுமொழி கூருமல் உடனே அகலுக ; அகலாது கிம்பின் பழியும் துயரும் விளையும் என்றவாறு.

இது, குறும்புக்காரரைக் கூடாதே என்கின்றது. சிறுமொழி என்றது கேலி குறும்பு கோள் முதலிய ஈன வார்த்தைகளே. தம்மை மருவினயைச் சிறுமைப் படுக்கி வருக லால் சிறுமொழி என நேர்க்கன. சிலுகு=சேட்டை, கலகம்.

வறுமொழியாளர் என்றது வீண் வார்க்கைகளையே விழை ந்து பேசி யாண்டும் துழைந்து கிரியும் வினர்களை.

பொருள் அற்ற புன்சொல் வறுமொழி என வந்தது. கெட்ட வார்க்கைகளையே பேசிக்கிரிகின்ற பட்டிகளைக் கிட்ட நெருங்கவிடின் தொக்துவியாதிகள் போல் ஒட்டிக்கெடுத்து விடுவர் ; அக்கெடு காலிகளின் வாய்க்கு எட்டாமல் ஒதுங்கிவிடுக

நீ மறுமொழி கூறின் அச்சிறுமொழி உன்னேச் சிறுமைப் படுக்கிவிடும். என்ன ? வறுமொழியாளர் வாய்கிறங் கால் இழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/203&oldid=1324779" இலிருந்து மீள்விக்கப்பட்டது