பக்கம்:தரும தீபிகை 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 த ரும தீ பிகை .

இது தாய்மொழிப் பயிற்சியின் தகவுாைக்கின்ற்து. சார்ந்து நன்கு கற்றல்=தகுந்த ஆசிரியரை அடுத்து வான் முறையாகப்பயின்று தெளிதல். உள்ளம் பதிந்து ஊன்றிப்பயிலின் உணர்வு கலங்கள் பெருகும் என்க. மேலெழுத்தபடி பாசாதே; நூல்களை அழுந்தி நோக்குக என்றபடி.

கான் பறந்து என்றது இயல்பான நாட்டு மொழியை விட்டு அயலான காட்டு மொழியை விழைந்து மயலுழந்து ஒடும் அச் செயல் தெரிய வந்தது.

வேறு ஒன்று என்றது அங்கிய மொழியை. தன் பேச்சு வழக் கோடு மாறுபட்டுள்ளமையான் வேறு என தேர்ந்தது.

வாய் மொழிகின்றதைக் காய் மொழி என்றது இயற்கை இனிமை எளிமை தெளிவு உரிமை பெருமை முதலிய உறுதி கலங்களை நோக்கி. அதனை ஆடை என்று குறித்தது, இன்றியமை யாத அதன் இயல்பும் உயர்வும் கருதி.

தான் பிறந்த நாட்டிற்கு உரிய இனிய மொழியை உரிமை யோடு உவந்து கல்லாமல், அயல் நாட்டு மொழியை அலங்து கற்றல் அரையில் உடை உடுக்காமல் உடலில் அணி அணிந்து உள்ளம் களிப்பது போல் ஒரு பித்தமயக்கமான எள்ளம் பாடாம்.

ஆடை யில்லாமல் கிருவாணமாயுள்ள ஒருவன் காதில் கடுக் கன், கழுத்தில் மணிவடம், கையில் கடகம், விாலில் மோதிரம் முதலியன அணிந்து கொண்டு வீதி நடுவே போனல் அந்தக் காட்சி எப்படி யிருக்கும்? அது போல் தன் சொந்த மொழியை முக்திப்படியாமல் அயலானதை மயலோடு படித்த ஆடம்பரமாய்ப் பிலுக்கி வெளி வருவார் நிலையும் இழிப்பிற்கே இடமாம்.

தாய்மொழியை இழந்து தருக்கி வருகின்ற அவரை இகழ்ந்து நோக்காமல் புகழ்ந்து ஊக்குவாேல் அவர் காட்டுணர்ச்சி யில்லாத காட்டு மாக்களே யாவார்.

ஆடைக்குப் பின் அணி என்றபடி தன் மொழியைத் தகவு டன் கற்றபின் மற்ற அங்கிய மொழிகளையும் ஆர்வமுடன் கற்க லாம். ஆடை அணி என்ற உவமைகளால் பொருள் கிலைகளே ஊன்றி உணர்ந்து உண்மையான உறுதி கலங்களை ஒர்த்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/209&oldid=1324786" இலிருந்து மீள்விக்கப்பட்டது