பக்கம்:தரும தீபிகை 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 த ரு ம தீ பி ைக.

உருகி உரிமை கூர்ந்து வருபவள். அத்தகைய அருமைக் காயை ஆர்வமுடன் ஒம்பி ஆகரியாமல் இடையே புகுந்த மனேவியிடம் மால் கொண்டு அவள் சொன்னபடி யெல்லாம் கொழும்பு புரிந்து இழிந்து திரிவாரை ஈண்டு உவமையாக எடுத்துக் காட்டியது, உவமேயமாகக் குறித்த பொருளேக் கருத்துன்றி உணர்ந்து கழித்ததற்கு இாங்கித் திருத்தமடைந்து கொள்ள.

விட்டில் பேசி வருகின்ற நாட்டு மொழியைத் காயோடு ஒப்பவைத்தது, அதன் தகைமை கருதி. காய், உடலைப் பேணி உருவை வளர்க்கின்ருள்; மொழி, அறிவைப் பேணி உயிாை வளர்க்கின்றது. பெற்ற தாய் போலவே உற்ற மொழியும் மக்க ளுக்கு உரிமை சாந்து உணர்வுகலம் உதவி உயர்வு புரிந்தருள் கின்றது.

பால் குடிக்கும் போதே கால் குடித்துப் பழகிவந்த வாய் மொழி எளிமைகனித்த அளியோடு இனிய ஒளி உதவிவருதலால் தாய்மொழி என உரிமை கூர்ந்து உரையாட நேர்ந்தது.

எங்க நாட்டவரும் தம்தம் சொந்தப்பேச்சைத் தாய்மொழி என்றே அன்புரிமையுடன் வழங்கி வருகின்றனர். கந்தைமொழி, பெண்டாட்டி மொழி, பிள்ளை மொழி என யாண்டும் எ வரும் வழங்குவதில்லை. ஆகவே காய் மொழி மிகவும் பயபக்கியுடன் பாராட்டத்தக்கது என்னும் நயனும் வியனும் நன்கு புலனும்.

பிறந்த மொழியை விழைந்து படியாகவன் பெற்ற காயை இகழ்ந்த படியாய் இழிந்து படுகின்றன். மாகாவை இழக்கவன் தீதாயுழந்து சீரழிந்துழலுதல் போல் ஆகாசமான உரிய மொழி யை ஒதாது ஒழிந்தவன் அறிவு கேடய்ை வறுமையிலுமுந்து சிறுமை மிக அடைகின்றன்.

அயல் மொழியை அவாவி மயல் மிகுந்து உழலாகே உனது இயல் மொழியைப் பயின்று உயர்வடைந்து கொள்க.

175. தாயின்பால் போலத் தமிழ்க்கல்வி தானிருக்கப்

பேயின் பால் வேட்டுழலும் பேயர்போல்-மாயம் பயிலும் அயல்மொழியே பன்னி மயலாம்

செயலில் இழிவர் செறிங் து. (இ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/211&oldid=1324788" இலிருந்து மீள்விக்கப்பட்டது