பக்கம்:தரும தீபிகை 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தாய் மொ ழி. 209

நம்மவர் நமது தாய் மொழியை இகழ்ந்து பேய்வழியாய் விாைந்து பிழை பட்டுள்ளனர் என்றவாறு.

தாய்மொழி மிகவும் சிறந்தது; அதனே எ வரும் உரிமையோடு பேணி வசவேண்டும் என மேலே கண்டோம்; இதில் தமது நாட் டவர் நிலைமையைக் காண்கின்ருேம்.

பெறுதல் வளர்த்தல்களைக் குறித்தது காயின் உரிமையும் உதவியும் உணா, பிள்ளை பெரியவன் ஆனவுடன் ஒரு மகளை மனத்து கொள்கிருன். பின்பு அம் மனேவியின் சொல் வழியே மாலுழந்து திரிகின்ருன். அத்தையலின் மையலால் காய் கந்தை யர்களை மறந்து விடுகின்ருன். அப் பேய்மகன் கிலைமை இங்கே காய் மொழியைக் துறந்து ஒழியும் சேய்களுக்கு உவமையாய் வந்தது.

பால் அருந்தும் பொழுதே வாய் மொழிக்கு வங்க தமிழை வயது ஏறியவுடனே அறவே மறந்து விட்டு வேருெரு மொழியை விழைங்து நம்மக்கள் விாைக்து படுகின்ருர், இப் பாடு இக்காட்டில் பழி கிலையில் வளர்ந்திருக்கின்றது.

வயிறு வளர்த்தற்காக வாய் மொழிகின்ற ஒன்றை மேலாக மதித்து மாலுழந்து கிற்கின்ருர்; அங்கனம் கின்றதோடு அமை யாமல் உயிரை வளர்க்கருளும் அருமைக் தாய்மொழியைக் கீழாக எண்ணிப் பாழ்வாய் திறந்து பழி கூறவும் நேர்கின்ருர்; இது எவ்வளவு கொடுமை! எத்துணை மடமை எத்தகைய நன்றி மறப்பு! உய்த்துனா வேண்டும்.

அதிகாரம், பொருள், கொஞ்சம் பகட்டு மதிப்பு அங்கிய மொழியால் அடைகின்ருய்; உயிரின்பம் அருளொழுக்கம் உண் மைகிலை முகவிய உயர் தலங்களெல்லாம் உன் மொழியால் பெறு கின்ரு ய். முன்னது பெருமை போலக் காட்டிப்பேயாட்டம்.ஆட்டி முடிவில் உன்னைச் சி.யமைப் படுத்தி ஒழியும். உன்னது, என்.றும் உறுதித் துணையாய் உய்தி புரிந்து உடனிருந்து உதவி அருளும்.

இந்த அருட் செல்வத்தை மறந்து விடலாமா? பகட்டு மனைவி போல் ფti, பொறிகளுக்கும் வெறிமயமான பொய்யின் பத்தைப் பொருத்தக் கொடுக்கலால் அந்த இன்ப கிலே யில் இழித்து அங்கிய மொழியை 伊 வியந்து கொள்ளுகின்ரு ய்; ஆயினும் காய் மொழியை இகழ்ந்த தவறு படாதே.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/216&oldid=1324793" இலிருந்து மீள்விக்கப்பட்டது