பக்கம்:தரும தீபிகை 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21() த ரு ம தீ பி. கை.

உடலை மினுக்கி உயிசை ஒழிப்பார் போல் கடல் கடந்து வந்த வெளி மொழியை விழைந்து உள் மொழியை இகழ்ந்து பலர் ஞான சூனியாாய் ஈனமடைந்துள்ளார். அவ் வீன நிலையில் மான மனிதர் மடியலாகாது.

உலக ஆடம்பரமான அதனை மையல் மதியால் மனைவிபோல் விழைந்து கொண்டாலும், உனது உரிமை மொழியை அருமைத் தாயாகப் பாவித்துப் s பெருமை புரிய வேண்டும். மனைவியினும் தாய் எவ்வளவு சிறந்தவள். அவளைத் தொழுவது தெய்வத்தைக் கொழுத படியாம்; அதனல் புகழும் புண்ணியமும் விளையும். என்றும் உனக்கு உயர்வு உண்டாகும். உண்மை தெளிந்து உன் மொழியைப் பேணி நன்மை அடைக.


* ====

179. மானமுள்ள மாமி வலிய மருமகள் முன்

தானடங்கி கிற்கும் தகைமைபோல்-ஞானமுயர் நற்றமிழும் இக்காட்டில் கண்ணியுள்ள ஆங்கிலத்தால் பற்றழிக்த தென்பர் பலர். (க)

பொல்லாத மருமகள் எதிரே நல்ல மானமுள்ள மாமி அடங் கிகிற்றல் போல் ஞான கலங்கனிந்த நமது தாய் மொழி ஆங்கிலத் தால் கிலேகுலைந்து உள்ளது என அறிஞர்பலர் அவல மிகுந்து கவலை உறுகின்றனர் என்றவாறு.

தமிழ் மொழியின் தற்கால கிலைமையை உணர்த்தியபடியிது. i இக்காட்டில் கலை நீட்டிக் கிரியும் தமிழர் கிலையினே முன்னம் கண்டோம்; இதில் தமிழின் கிலைமையைக் காண வந்துள்ளோம். ஆங்கிலம் என்பது இங்கிலாந்து தேசத்தில் பேசப்படுகின்ற மொழி. அது இந்தியாவில் வந்து ஏறி இத் தேசத்தவரைப் பாசப் படுத்தி ஆட்சி புரியும் அதிசய கிலையை எண்ணுக்தோறும் வியப் பும் விம்மிகமும் விசைத்து எழுகின்றன.

ஆங்கில மோகம் இந்நாட்டில் ஒங்கி யுள்ளது போல வேறு யாங்கனும் இவ்வளவுகிலையில் இங்கவில்லை. அதனல் தமிழ்தாழ்க் துள்ளது போல் மற்ற எம்மொழியும் தாழவில்லை.

'தமிழ் நூல்களைத் தலைகீழாக முழுதும் படித்தாலும் ஒரு ஒலைத்தடுக்குத் தானே கிடைக்கும்; ஆங்கிலத்தில் இாண்டொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/217&oldid=1324794" இலிருந்து மீள்விக்கப்பட்டது