பக்கம்:தரும தீபிகை 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 த ரு ம தீ பி. கை.

இ-ஸ். கோான தாயின் பால் இழந்த பிள்ளையும், தீராத நோயின் பால் விழுந்த மனிதனும், தனது சீரான காய் மொழியை நன்கு கல்லாத மகனும் வலியிழந்து மெலிவடைந்து மதியழிந்து மருண்டு கிடப்பர் என்றவாறு.

தன் மொழி என்றது தனக்குப் பிறப்புரிமையாய் வாய்த்த பேச்சு மொழியை. விட்டுள் வழங்கும் நாட்டு மொழியை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; அக்கல்வி எல்லா கலங்களையும் இனிது நல்கும்; அங்ானம் கல்லாது கைவிடின் பொல்லாத பிழைகள் பல புகுந்து வருத்தும் என இதுவரை அறிந்து வந்தோம்; இதில் இரண்டு உவமைகளோடு இணைத்து அதன் கிலைமையும் தலைமை யும் தெளிவாக உணர்த்தப்படுகின்றன.

ஈன்ற காயினுடைய பால் குழங்கைக்கு ஆன்ற உறுதியாம். அப்பால் இன்றி வேறு எப்பால் ஊட்டினும் அது அவ்வளவு உாம் ஆகாது. இயற்கை யுரிமையாய் இனிதமைந்துள்ள உணர்வு மொழியை உயிர்க்கு உறுதியா ஒர்ந்துகொள்க.

தாழாத நோய் = நீங்காத கொடிய பிணி. பால் = இடம்.

தீயாத கோய் வாய்ப் பட்ட மனிதன் உடலுறுதி குன்றித் துயருழந்து உயிர் அயர்ந்து உழல்வன்.

தேர்தல்=கல்வியை நன்கு கற்றுத் தெளிதல். மன்= வலி. உரிய தாய் மொழியை ஊன்றிப் பயின்று பொருள் நலங்களை ஒர்ந்து தேர்ந்து கொள்ளாவழி உணர்வுவலி குன்றி ஒளிமழுங்கிப் போம். போகவே அம்மனிதன் உருவுடையனுய் வெளியில் அலையி லும் உள்ளே உயிர் கிலையில் மெலிந்து இழிந்து கிற்பன்.

பால் இழக்க குழந்தையும், நோயுழங்க மனிதனும் உடல் உாங் குன்றி உயிர் தளர்ந்து படுவர் ஆதலால் நூல் இழந்த மக ளுேடு அவர் ஈண்டு எண்ண வந்தனர்.

மொழியைக் கோவழி விழையும் பழி துயரங்களைத் தெளி வாக உணர்ந்துகொள்ளுமாறு எளிதா எடுத்துக்காட்டிய படியிது.

தன் சொந்த மொழியை நன்கு பயின்று மனிதன் எந்த வழியும் சிந்தை தெளிய வேண்டும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/219&oldid=1324796" இலிருந்து மீள்விக்கப்பட்டது