பக்கம்:தரும தீபிகை 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ம னி த ரிை லை 15

தன் மனத்தைத் தாய்மை செய்து கொண்டவன் என்றும் குன் முத இன்ப வாழ்வை எய்தி மகிழ்வான் என்பதாம்.

அவ்வளவே தோய்ந்தான் என்றது மனத்தைப் பரிசுக்க மாகப் பண்படுத்திய வுடனேயே திவ்விய மகிமையுடைய பரம பாக்கியவானுய் அவன் விளங்குவான் என்றவாறு.

இறந்த காலத்தால் கூறியது விரைந்து பயன்பெறுதல்கருதி. புனிதமான நல்ல எண்ணங்கள் புண்ணியங்களாய்ப் பொங் கியெழும் ஆதலால் அந்த எண்ணங்களுக்கு மூலமான மனம் இன்ப்ப் ப்ேற்றிற்கு ஏதுவாயது; தீமையான நினைவுகள் பாவங் களாய் பல்கி வருகின்றன; வரவே அவற்றையுடைய மனம் ாரக துன்பத்திற்குக் காரணமாய் நாசம் புரிகின்றது.

தோம்=குற்றம். என்றது பொருமை வஞ்சகம் குரோதம் முதலிய தீமைகளை. இந்தக் தீய மாசுகள் மனத்தில் நீசமாயப் வளர்ந்து மனிதனை நாசமாக்கும் ஆதலால் அவற்றை சண்தை சிக்கித் தண்ணளி புரிந்து புண்ணியங்களை எண்ணிப் புனிதமுற வேண்டும். இனிய எண்ணங்கள் இன்ப வுருவங்களாய்ப் பெருகி வருகின்றன.

மனிதன் தனது ஆதி மூல நிலையை ஒர்ந்து தீது மூலங்கள் தீர்ந்து செவ்விய சீலங்கள் தோய்ந்து திவ்விய நிலையை அடைய வேண்டும் என்பது இதுகாறும் கூறி வந்தவற்றின் திரண்ட் பொருளாம். குறித்துள்ள குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மனிதன் கடவுளுடன் நெருங்கிய உறவுரிமை யுடையவன். அன்பும் அருளும் அவனே இன்பமாக்கும். மாசு தீர்ந்தால் அவன் ஈசனவன். அவனுடைய அறிவுக்குப் பயன் ஆதியைப் பெறுதலே. அது பெருவழி அவன் பிறவியால் பயனில்லை. பாவச் செயல் அவனைப் பாழாக்கி விடும். திய எண்னத்தால் தீய ஞகின்ருன். உள்ளம் மாசுறின் உயிர் நீசமுறும். புனித எண்ணமுடையவன் அமிர்த மயமாவன்.

தாய மனமுடையவன் பேரின்பம் அடைகின்ருன்,

முதலாவது மனிதனிலை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/22&oldid=1324590" இலிருந்து மீள்விக்கப்பட்டது