பக்கம்:தரும தீபிகை 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தாய் மொழி.

மனிதனும் மொழியும்

எண்ணரும் பிறப்பில் யாவும் கடந்து மண்ணிடை உயர்ந்த மானுட மாய்வரல் புண்ணிய விளைவின் பொலிவே என்ப : விலங்கினும் மனிதன் பெரியவன் என்பது 5 பேசும் வகையில் பெருகி வங்தது :

பிள் அளயில் தொடர்ந்து பேசிய மொழியே ஒள்ளிய உயிரின் உயர்தாய் மொழியாய்த் தெள்ளிய நீர்மையில் சிறந்து கின்றது : பிறந்த நாடும் பேசும் மொழியும் 10 சிறந்த தாயெனும் சீர்மையில் அமைந்தன : வாய்மொழி யான அத் தாய்மொழி ஒன்றே அறிவருள் ஈகை ஆண்மை வீரம் மானம் மேன்மை மாண்புடன் நல்கும் : உயிரின் கிழமையாய் உற்ற அம் மொழியைப் 15 பயிலுங் தோறும் பான்மை மிகப்பெறும் :

உரிமையின் அமைந்ததை உவந்து பேணின் மறுமை கலங்கள் மருவி

இருமையும் பெருமையாய் இன்புற வருமே.

_

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தாய்மொழி எ வர்க்கும் தலைசிறக்கது. - -- அதனைச் சிறப்பாக மதித்துப் படி க்கவேண்டும். படியாது விடின் பழி படியும். = உற்ற மொழியே பெற்ற தாயாம். இயல்மொழி தெளிந்தபின் அயல்மொழி பயில்க. உரிய மொழியே உய்தி யருளும், மற்றது மதி மயக்கும். அயலில் மோகம் அவமதிப்பாகும். சொந்த மொழி மறந்தவர் கிங் கனேயுறுவர். எந்த வழியும் அதனே இனிது பேணுக.

18-வது தாய்மொழி முற்றிற்று.

213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/220&oldid=1324797" இலிருந்து மீள்விக்கப்பட்டது