பக்கம்:தரும தீபிகை 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 த ரு ம தீ பி. கை

J

காதல் என்பது ஆடவரும் மகளிரும் உள்ளம் கலந்து உயிர்க்கேண்மை கொண்டு உவந்து கிற்கும் போன்பு. ஆண்மை யின் தனி நிலையமாயுள்ள விாம் முன்னுற வந்தது. இருபாலும் ஒருமையுடன் மருவி மகிழும் காதல் அதன் பின் வைக்கப்பட் டது. இதன் தன்மையும் தகைமையும் பலவகைத் துறைகளாய்ப்

பாந்து விரிந்து இன்பச்சுவை சாந்துள்ளன.

விாமும் காதலும் தமிழ்மொழியில் விளங்கி நிற்றல்போல் வேறு எம் மொழியிலும் இத்தகைய விழுமிய நிலையில் விளங்க வில்லை. இவற்றின் இயல்பைச் சிறிது விளக்கப் புகினும் ஈண்டுப் பெரிதும் இடம் விரியும். அருள் ஈகை முதலியனவும் அவ்வா றேயாம்.

இவ்வண்ணம் உயர்கலங்கள் பல சாந்துள்ள தமிழை ஊன்றி உணராமல் ஊன முற்றிருத்தல் ஈனமாகும். உயிர்க்கு உறுதி நலம் தருகின்ற தெய்வத்தமிழை உய்திபெற உணர்ந்து கொள்ளுக.

184. ஊழி யளவும் ஒருநூலே ஒர்ந்துயிர்கள் வாழி புரியும் வகைபெருகி-ஆழியென ஆழ்ந்து பரங்த அருங்தமிழை ஆய்ந்து ே சூழ்ந்து தெளிக துணிந்து. (*)

இ.ள்.

ஒரு நூலே ஊழி அளவும் ஒதி உணர்கற்குரிய உயர் கல முடையது. அத்தகைய நூல்கள் பல சாந்து அமிர்தக் கடல் போல் ஆழ்ந்து பாத்து பெருகியுள்ள அருமைத் தமிழை நீ ஒர்ந்து உணர்ந்து உண்மையைத் தேர்ந்து கொள்ளவேண்டும் என்றவாறு.

இது, தமிழ் நூல்களின் கிலைமையைக் கூறுகின்றது.

ஊழி என்றது. பல ஆண்டுகள் என்றபடி, நீண்ட கால அள வைக்கு ஒர் ஆன்ற எல்லை தோன்ற வந்தது.

தமிழிலுள்ள விழுமிய நூல்கள் தொகை அளவில் சுருங்கி யிருப்பினும், ஒவ்வொரு நூலும் அரிய பொருள் வளங்கள் கிறை ந்து உணர்வுக்கடலாய் ஒளி சிறந்துள்ளது. கன் வாழ் நாள் முழு வதும் ஒரு அாலேயே ஆராய்ந்து மனிதன் முடி வுகாணு கபடி அறிவு நலம் சாந்து பெரிதும் விரிந்து உறுகி நலம்.அமைந்திருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/227&oldid=1324804" இலிருந்து மீள்விக்கப்பட்டது