பக்கம்:தரும தீபிகை 1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம்

உ ட ல் நிலை.

- இஃது இந்த உடம்பினது நிலைமையை உணர்த்து கின்றது.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அரிய பொருள்களை உயிர் அடைதற்கு உரிய துணையாய் உடனின்று உதவி வருகின்றமை யான் மனிதனிலையின் பின் உடல் நிலை வைக்கப்பட்டது.

Y 11. ஆவிக் கினிய அழகிய ஆலயமாய்

மேவி யிருக்குமிம் மெய்ங்கிலேயில்-காவில்ை சொல்லற் கரிய தொழிலுயர் நுட்பங்கள் i எல்லே யிலகாண் இசைந்து. (க)

இ-ள் உயிர்க்கு அழகிய இனிய கோயிலாய் அமைந்திருக்கின்ற இக்க விழுமிய உடலில் அளவிடலரிய அற்புத நிலைகள் அடங்கி

யுள்ளன; உண்மையை உணர்ந்து உரிய பயன் பெறுக என்க.

கடவுட் கூருகிய ஆன்மாவுக்கு நிலையமாய் நிற்றலின் உடல் ஆலயம் என வந்தது. மேவி இருக்கும் என்றது அரிதாக அமைந்துள்ள இதன் அருமை தெரிய என்க. இம் மெய் என் லும் அண்மைச் சுட்டு உரிமை கோன்ற வுற்றது. மெய்யான உயிர்க்கு மெய்யா யிருக்கலின் தேகம் மெய் என நின்றது. மெய் = உடல், உண்மை. பேர் நிலை ஒர் நிலையா ப் வக்கது.

தொழில் நுட்பங்கள் என்றது நாவில் நீர் ஊறல், உதிரம் உலாவல், காடிதுடித்தல் முதலிய வினே கலங்களே. உணவையும் நீரையும் உள்ளே கொண்டு போய்த் தக்க இடங்களில் பிரித்துச் சேர்த்துப் பக்குவப் படுத்திப் பதனுறுத்துக் திறன் அதிசய எந்திரங்கள் எதனிலும் மிஞ்சி விதி நியமங்களா புள்ளது.

கண்ணுள் மிளிரும் சிறிய கரு விழியின் ஒளி எண்ணரிய தொலைவிலுள்ள பெரிய விண்ணுெளியையும் கவர்ந்து வெளி செய்து விளங்கும் வித்தக நிலை எத்துணை வியப்புடையது? எவ்வளவு அதிசயங்கள்! உய்த்துணர வேண்டும்.

உயிர் நிலையமான இந்த உடலில் அமைந்துள்ள கருவிக் திர ன்களின் அருமைப் பாடு ளை . ரைகளால் உரைக்க இயலா;

தெய்வ ருெ டியின் அ/ம்புக நிலையில் இது கலை சிறந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/23&oldid=1324591" இலிருந்து மீள்விக்கப்பட்டது