பக்கம்:தரும தீபிகை 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ் 225

ஒரு தமிழ்ப்பாட்டுக்குப் பல ஊர்களைப் பரிசிலாகப் புல வர்களுக்கு வரிசை புரிந்து தந்துள்ளனர்.

பாரி, நள்ளி, ஆய், பேகன், குமணன் முதலிய சிற்றாசர் களும் தமிழை உயிரினும் இனிதாகப் பேணி யிருக்கின்றனர்.

திருஞான சம்பந்தர் சமணர்களோடு வாது புரிந்த பொழுது தாம் எழுதிய தமிழ்ப்பாடலை வையை சதியில் விட்டனர். வெள் ளக்கில் அது எகிர் எறிச்சென்றது. நெருப்பில் இட்டனர்; யாதும் கரு காமல் பசுமையாயிருந்தது.

புனலில் ஏடு எதிர் போகெனப் போகுமே ;

புத்தர்ைதலே கத்தெனத் தத்துமே ; கனலில் ஏடிடப் பச்சென் றிருக்குமே

கதவம் மாமறைக் காட்டில் அடைக்குமே பனேயில் ஆண்பனே பெண்பனே ஆக்குமே

பழைய என்புபொற் பாவையது ஆக்குமே சின அரா விடம் தீரெனத் திருமே

செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே. ( 1)

அப்பர் பாடல். தலைகொள் நஞ்சமு தாக விளையுமே

தழல்கொள் நீறு தடாகம தாகுமே

கொலைசெய் யானே குனிந்து பணியுமே

கோள ராவின் கொடுவிடம் திருமே

கலைகொள் வேத வனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத் திறக்குமே

அலைகொள் வாரியில் கல்லும் மிதக்குமே

அப்பர் செப்பும் அருங்தமிழ்ப் பாடலே.

தமிழ்க்கவிகள் விளைத்துள்ள அதிசயங்களை இவற்ருல் அறி கின்ருேம். இங்கனம் கிவ்விய மகிமைகள் வாய்ந்துள்ளமையான் தெய்வத் தமிழ் என வந்த எ. தமிழறியும் பெருமாள் என்பது சிவ பெருமானுக்கு ஒரு பெயர். அதன் அருமையை அப் பாமனே தனியுரிமையாக அறிய உரியன்.

பாரறியும் அறிவினுமிப் பார்மேல் கின்ற

醛、飞 பூசுஞானத் தானும் எட்டிப் பார்க்கொணுத

பேரறிவே ! சிற்றறிவேற்கு இருளை நீக்கும்

பேரொளியே ! அங்கயற்கண் பிரியாதானே!

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/232&oldid=1324809" இலிருந்து மீள்விக்கப்பட்டது