பக்கம்:தரும தீபிகை 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உடல் நிலை 17

அண்ட கிலேயை அறிந்தள விடினும்

பிண்டகிலே யறிதல் பெரிதும் அரிதாம்.” என்ற கல்ை இவ் வுடம்பின் அமைதியும் அருமையும் உணர லாகும். உயிரின் நிலையமாய் உடல் ஒளி புரிந்துள்ளது.

இத்தகைய அற்புத உருவைப் பொற்புடன் போற்றி இதன் பயனை விரைந்து பெற வேண்டும் என்பது கருத்து.

= ---

18. எண்ணரிய தோற்றத்துள் இம்மா னுடம்பெறுதல்

நண்ணரிய புண்ணியத்தின் நற்பயனே-விண்ணரிய பேறெல்லாம் பெற்றுப் பெருமையுற வுற்றவிதன்

இ-ள் அளவிடலரிய பல பிறவிகளையும் கப்பி இந்த மானுட யாக் கையைப் பெற்றது பெரிய புண்ணியத்தின் பயனும், அரிய பேறுகள் பல அடையும்படி உயிர்க்கு உறுதியாய் வந்துள்ள இவ் வுடலின் பெருமை உரையிடலரியது என்பதாம்.

தோற்றம் என்றது பல்வேறு உருவங்களில் தோன்றி நிற் கும் சிவகோடிகளே. புல் பூடு செடி கொடி மரம் புழு பறவை விலங்கு முதலிய பலவகைப் பிறவிகளையும் கடந்து இந்த இனிய மனித வுடம்பை அடைக்கது மிகவும் அதிசயம் என்க.

கடலைக் கையில்ை நீந்திக் கரையேறியது போல் இவ்வுடலே நாம் அடைந்திருக்கிருேம். இந்தப் பேற்றின் அருமையைக் குறித்து அறிஞர் பலரும் வியந்து கூறியுள்ளனர். இல அடியில் வருகின்றன. கருதிக் கானுக.

பரவை வெண்டிரை வடகடற் படுதுகத் துளேயுள்

திரைசெய் தென்கடல் இட்டதோர் நோன்கழி சிவணி அரச! அத்துளே அகவயிற் செறிந்தென அரிதால் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.”

(சீவக சிந்தாமணி)

வினேபல வலியினலே வேறுவே றியாக்கை யாகி

நனிபல பிறவிதம்முள் துன்புறுாஉம் நல்லுயிர்க்கு மனிதரின் அரியதாகும் தோன்றுதல்.” (வளேயாபதி

I iak

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/24&oldid=1324592" இலிருந்து மீள்விக்கப்பட்டது