பக்கம்:தரும தீபிகை 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 த ரும பிே கை.

"தாயாய் அமைந்த தமிழ்மொழியைப் பேணுமல்

பேயாய் அலைந்து பிறழ்கின்ருர்-நோயாக வந்து பிறந்து வளர்ந்து வசைவளர்த் தந்தோ அழிவர் அயல். ' o

என்றபடி மயலுழந்து அவர் மாண்டு போகின்ருர்,

இங்ங்ணம் பலர் கிலை திரிந்து கின்ருலும் சிலர் தமிழை உரிமையுடன் உவந்துபயின்று உணர்வின்பம்.நகர்ந்துவருகின்ருர். பிறப்பு மொழியைச் சிறப்பாகப் பேணிப் பிறப்பின் பயனே அனைவரும் அடையவேண்டும் என்பது கருத்து.

பிறப்புரிமை யுடன் வளர்ந்து பேச்சுவழக்

, கினிதமைந்து பெருகி உன்றன் சிறப்புடைய தாய்மொழியாய்ச் சீர்ழிகுந்த தமிழ்மொழியைச் செவ்வையாக உறப்பயின்று தெளியாமல் ஊன்படிந்து

திரிவாயேல் ஊனம் அன்ருே இறப்படையு முன்பு பிறப்படைந்த

பயன்பெறுதல் இனிமை யாமே.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

தமிழ் இனிமை என்னும் பொருளது. அரிய சுவைகள் நிறைந்தது.

சிறந்த ர்ேமைகள் செறிந்தது. உயர்ந்த நால்கள் அமைந்தது. தெய்வத் தன்மை வாய்ந்தது. அரசும் வணங்கி வந்தது. - . இன்று அருமை குன்றி யுள்ளது. உரியவர் உறங்கி யுள்ளனர். சிறுமைகள் பேசிச் சீரழிகின்றனர். பழம்பெருமை கிளர்ந்து வளம்பெறவேண்டும்.

19-வது தமிழ் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/243&oldid=1324820" இலிருந்து மீள்விக்கப்பட்டது