பக்கம்:தரும தீபிகை 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 த ரு மதி பிகை

கூர்மையான அறிவுமட்டும் போதாது ; அது சால்போடு சார்ந்த போதுதான் மேன்மை மிகப் பெற்று நூல் விளக்கும் பான்மை படிகின்றது. சால்பு=மனப்பண்பு.

கண்ணுக்கு ஒளிபோல் அறிவுக்குச் சால்பு. பல் குணங்

களும் இயல்பாக கிறைந்த சால்பு அமைத்தபொழுது அறிவு தெய்வ மணம் கமழ்ந்து தேசுமிகுந்து செழித்து விளங்குகின்றது.

அத்தகைய உத்தம உயிரிலிருந்து ஊறிவருகின்ற சிேய கருத்துக்களே நூல்கள் ஆகின்றன ; ஆகவே அவை அறிவுக்கு உணவாய் உயிரினங்களுக்கு உய்தி புரிகின்றன.

மால், அறிவின் சாாம் ; என்றமையால் அதன் நீர்மையும் நிலைமையும் தெரியலாகும். மேல்வரும் மன்பதை என்றது பின்னே இடையருது தொடர்ந்து வருகின்ற மனுக் குலத்தை. மாந்துதல்=அள்ளி நுகர்தல். முன்னேர் ஈட்டி வைத்துள்ள அறிவமுகத்தை உள்ளுற நுகர்ந்த உயிர்கள் உறுதிநிலம் வெறு கின்றன. நுகராதன இழிந்து கழிந்து ஈனமாய் ஒழிகின்றன. . - உயர்ந்த உணர்வின் சாாங்களாய்த் திாண்டு மன்பதைக்கு இன்ப முதல்களாக நூல்கள் இசைந்திருக்கின்றன. அரிய பொ ருள்கள் கிறைந்த அந்த இனிய கருவூலங்களை இழந்துவிடாதே ; விாைந்து உரிமை செய்து கொள்ளுக என்பது கருத்து.

193. தெள்ளமிர்தும் பாலும் தெளிதேனும் இம்பாகும்

தள்ளரிய இன்சுவையே தாங்கிடினும்-உள் ளமுறு அடு// லின்பம் போல நுகரும் தொறும்பெருகி மேலின்பம் ஆமோ விளம்பு. (e–)

இ-ள் -

தெள்ளிய அமிர்தம், வெள்ளிய பாலும், தெளிக்க தேனும், தீம்பாகும் இனிய சுவையுடையன ஆயினும், ஒள்ளிய நூலின் சுவை போல நுகரும் தோறும் பெருகி மேலும் மேலும் கிலை யான இன்பம் நலமாகப் பயவா என்றவாறு, --

ஆமோ என்று வினவியது ஆகாது என்னும் குறிப்பினது.

அமிர்கை முதலில் குறித்தது அதன் அருமை கருதி, விண். ணமர் பொருள் ஆதலின் மண்ணுறு பொருள்களினும் முன்னுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/245&oldid=1324822" இலிருந்து மீள்விக்கப்பட்டது