பக்கம்:தரும தீபிகை 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல். 2:39

வந்தது. ம்ேபர்கு = இனிய வெல்லப் பாகு. கருப்பஞ் சாறு, கனி பகம் முதலிய இனிய பாகங்கள் எல்லாம் தீம் பாகு என கின்றன. தள்ளரிய சுவை என்றது யாரும் எள்ளி இகழாமல் யாண் டும் அள்ளி நுகரும்படி இனிய சுவைகளை இயல்பாக எய்தியுள் катП г. Lг. கருதி. தாங்கிடினும் என்றது. அசாரங்கள் யாது மின்றி அ.கி மதுரமான சாங்களே கிாம்பித் கதும்பி கிற்கும் நீர்மையும் நிலைமையும் கினைத்துகொள்ள. -

அறிவின் பத்தின் அ ரு ைம தெரியப் பொறியின் பங்கள் புலனாய் வந்தன. மதி நலம் கனிந்தது மாண்பு மிக வுடையது.

உள்ளம் உறும் என்றது நூல் இன்பம் துகரும் இடம் குறித் தது. உள்ளத்தே அனுபவிக்கின்ற ஒர் உயர்ந்த இன்ப நுகர்ச் சிக்குப் புறத்தே சிறக்க சுவையுடைய சில பொருள்களை இனமாக எடுத்துக் காட்டி அதன் பெருமையை விளக்கியபடி யிது.

அமிர் கம் முதலியன நாவில் உண்ட வுடனே உருக்குலைந்து ஒழியும். தால் நயம், உள்ளம்கொண்டு உணரும்தோறும் உலவா இன்பம் பயந்து ஓங்கி வளரும். வருகிய பொழுது மட்டும் சிறிது சுவையாய் அவை வறிது கழியும் ; இது கருதிய அளவே பெரி தும் சுவையாய்ப் பெருகி எழும். அவை உடலைக் கொழுக்கச் செய்து மயலில் ஆழ்த்தும் ; இது, உயிரை வளர்த்து உயர்வில் ஊக்கும் என்க. புத்தி கத்துவத்தில் அனுபவிப்பது ஆதலால் முத்தி இன்பம் போல் என்றும் இது முவா முதன்மையை மேவி யிருக்கின்றது.

தேக போகங்களின் கிலைமைகளையும் ஆன்ம போகத்தின் தலைமையையும் ஆய்ந்து தெளிக.

பொறி இன்பங்களிலும் அறிவின்பமே சிறந்தது ; அதனை மனித இனம் புனிதமாகப் போற்றிக் கொள்ள வேண்டும்.

“In the pursuit of intellectual pleasures lies every virtue ; of sensual, every vice.” (Goldsmith)

அறிவுச் சுவையில் அறம்வளர்கின்றது;பொறி நுகர்ச்சியில் மறம் விளைகின்றது' என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

நூல் உணர்ச்சி என்றும் மேலான இன்பம் விளக்கும் ஆத லால் அதனைச் சாலவும் விழைந்து பேணி உவந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/246&oldid=1324823" இலிருந்து மீள்விக்கப்பட்டது