பக்கம்:தரும தீபிகை 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 த ரும தீ பி. கை

- * Hil 198. விழுமிய நூலுயர்ந்த மெய்ப்பொருளேத் தாங்கி வழுவின்றி வாய்ந்து வயங்கி-அழகமைந்த f மெல்லுடம்போர் கல்லுயிரை மேவிகிற்றல் போலென்றும் புல்லியின்பம் செய்யும் பொலிங்து (ங்)

இ-ள். . அழகு நிறைந்த மெல்லிய உடம்பில் நல்ல உயிர் அமைந்து கிற்றல்போல் உண்மைப் பொருள்களை மருவி உயர்ந்த நூல் ஒளி

மிகுந்து என்றும் இன்பம் புரிந்து வருகின்றது என்றவாறு.

விழுமிய = மிகவும் மேன்மையான. விழுமம் என்னும் சொல் சீர்மை நீர்மைகளை உணர்த்திவரும்.

நல் உயிர் என்றது சக்தியம் சாந்தம் சீலம் முதலிய உத்தம நலங்கள் தோய்ந்து உள்ளதை. அக்கக் கிவ்விய சீவன் எவ்வழி யும் இன்பமாய் இனிதமர்ந்திருக்கல் போல் மேலான நாலும் ஞாலம் நலமுறக் கோலம்கொண்டு கிற்றலால் அஃது இங்ானம் உவமிக்க வந்தது. மெல் உடம்பு சொல்லுக்கும், நல் உயிர் பொருளுக்கும் ஒப்பாம்.

புல்லி இன்பம் செய்யும் என்றது, உள்ளம் உணர்ச்சிகளைப் பொருக்கி நின்று உயர்ந்த மகிழ்ச்சிகளை விளைத்து வருகல் கருகி. புல்லுதல்=பொருத்தல், கழுவல்.

புறத்தே உருவப்பொலிவும் அகக்கே இனிமைப் பண்பும் கிறைந்த ஒரு அருமைத் திருமகன் போல் சிறந்த தால் செவ்வி சுரங்து திகழ்கின்றது.

சொல்லிலும் பொருளிலும் சுவை சுரந்து பல்வகை கலங்க ளும் படிந்து எல்லாரும் மகிழ்வுற இனிது எழுந்துள்ளதே நல்ல நூல் ஆம். அது சீவநதி போல் யாவருக்கும் ஆதாவருளும்.

அழகும் குணமும் அமைந்த விழுமிய குலமகனை உவமை குறித்தது காட்சிக்கும் கருத்துக்கும் இன்பம் பயந்து பாண்டும் மாட்சி புரிந்து வருகின்ற அகன் ஆட்சி கிலையை அறிய.

வெளியே மொழியில் இனிமையும், உள்ளே கருத்தில் அரு மையும் கனிந்து செவிக்கும் சி ங் ைத க் கு ம் இனியனவாய்ச் செழித்து விளங்குவனவே சீரிய நூல்களாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/247&oldid=1324824" இலிருந்து மீள்விக்கப்பட்டது