பக்கம்:தரும தீபிகை 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 த ரு ம தி பி ைக.

உற்ற துன்பங்களை ஒழித்து உயர்ந்த இன்பங்களை அளித்த ருளுகலால் நால்கள் உயிர்கட்கு உறுதித் துணைகளாய் அமைக் தன. அந்த அரிய சஞ்சீவிகளை வறிதே இழந்து விடாதே.

இங்கு அதன் துணைபோல் உண்டோ ? என்றது இவ்வுலகத் தில் நூலைப் போல உயிர்க்கு உரிமையான இனிய துனே யாண்டும் யாதும் இல்லை என்றவாறு. I

எவ்வழியும் இன்பமாய் இருமையும் பெருமை தருகின்ற அருமை நூல்களை ஆர்வத்துடன் போற்றிக் கொள்க.

195. அல்லலுறும் இவ்வுலகாம் ஆரணியத் தோரிரண்டே

நல்ல கனிகளுள காடுமினுே-சொல்லினென்று நூலாகும் மற்ருென்ருே துண்ணறிவு சீலமிக்க மேலோர்கட் பாகுமிது மெய். (டு)

இ-ள். துன்பங்கள் கிறைந்த இவ் வுலகமாகிய நச்சுவனத்தில் இாண்டு இனிய கனிகள் உள்ளன; ஒன்று நூல்; மற்று ஒன்று சீல முடைய மேலோர் நட்பு ஆம் என்றவாறு.

இது, நல்ல தாலையும், நயத்தகு சீலரையும் நயந்து கொள்க என்கின்றது. பயிற்சியும் கூட்டமும் உயர்ச்சி புரிகின்றன.

அருந்தல் பொருங்கல்கள் இனிது அமையும்பொழுது சிறிது சுகமாய், அதன் பின் பெரிதும் அல்லல்களிலேயே உயிரினங்கள்

மருவி உழலுதலால், அல்லல் உறும் ' என இவ்வுலக கிலேமை சொல்ல வந்தது.

இன்பு ஒர் அணுவாம்; இடர் அதற்கு மாமலையாம் ” என் றபடி புன்போக மான இவ் வையத்தின் வெய்ய கிலே மெய்யறி அடையார் எவர்க்கும் கன்கு தெளிவாம்.

இவ் வுலகத்தைக் காடு என்றது கொடுமையும் கொதிப்பும் மடமையும் மண்டி யுள்ளமை கருதி, ஆரணியம்=வனம்.

வஞ்சம் பொருமை சூது கோபம் முதலிய தீமைகளே கிாம்பி எங்கும் வெப்பமாய்க் கானல் பாத்துள்ள இம்மானிலத்தில் மனி தர் இனிது தங்கித் தகையாறி இன்புறுதற்குக் கனி மாங்கள் கிறைந்த குளிர் குஞ் சோலைகளாய் இரண்டு தனி நிலையங்கள் இருக்கின்றன என இனம் துலக்கி இடம் விளக்கியபடி யிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/249&oldid=1324826" இலிருந்து மீள்விக்கப்பட்டது