பக்கம்:தரும தீபிகை 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 த ரு ம தி பி கை.

நீதி நலம் கனிந்த செங்கோல் இலஞயின் வேங்கன் தீதில் இழிந்து தேய்ந்து ஒழிகின்ருன், ஒதி யுணரும் உயர் நால் இலாேல் மாந்தர் பேதைகளாய் இழிந்து பிழைபடுகின்ருர், u வெள்ளிய சந்திான் இல்லையாயின் வானம் ஒளியிழந்து இரு ளடைகின்றது; தெள்ளிய நூல் இன்றேல் மானுடர் உள்ளொளி குன்றி விழிகண் குருடாாய் வறிதே மருளுறுகின்றனர்.

நூலறிவை இழந்தபொழுது மனிதன் இங்ானம் பலவகை நலங்களையும் இழந்து வினே பாழ் படுகின்ருன். அங்கனம் பாழ் போகாமல் வாழ்க என உரிமையுடன் வழி யுாைக்கபடி யிது.

கொழும் கலையின் நால் என்றது பயிலுகற்குரிய நூல்களின் இயல்பு உணர்த்தி கின்றது. கொழுமை=குளிர்ந்த செழிப்பு. உணர்வு நலங்களின் இனிய வளங்கள் என்க.

வெள்ளையாயுள்ளன எல்லாம் ஆவின் பால் போல் இனிய பால் ஆகா, புத்தக உருவில் வெளி வருவன எல்லாம் நல்ல நூல்கள் ஆகா. உணர்வு நலம் சுரந்து கலை மணம் கமழ்ந்து உயிர்க்கு உறுதி யான உயர்ந்த நூல்களையே தாம் தெரிந்து உவந்து கொள்க.

நூலறிவை மதியொளியோடு ஒப்ப வைக்கது வாழ்க்கையை எழிலுறுத்தி விளக்கியருளும் அதன் விழுமிய வளமை நோக்கி.

அறிவாற்றலும் ஆன்ம இன்பமும் உலகமதிப்பும் உயர்க்க ர்ேத்தியும் உறுதி நலனும் ஒருங்கே கருதலால் சிறந்த நூல்களை விழைந்து பயின்று பிறந்த பயனே விரைந்து பெறுக.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மேலோாது அறிவின் சாயமே நாலாய் வந்துள்ளது. நூல் இன்பம் அமிர்தினும் சிறந்தது. ஆன்ம நலம் வாய்ந்தது. அல்லலை ஒழித்து ஆனந்தம் அருள்வது. எல்லா இன்பநலங்களும் இயல்பாய் இசைந்தது. நல்ல எண்ணங்களை நாளும் விளப்பது. புண்ணிய புருடரைக் கண் எதிர் கருவது. கற்பகத் தருவைப்போல் அற்புதம் புரிவது. உத்தம நூலே கித்தமாய் கிலவும். ஆால் படியா கார் மால் படிந்து உழல்வர்.

அநூலிழந்த வாழ்வு பால் இழந்த பிள்ளையாம்.

20-வது நூல் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/257&oldid=1324834" இலிருந்து மீள்விக்கப்பட்டது