பக்கம்:தரும தீபிகை 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 த ரு ம தி பி கை.

வசன வடிவினும் செய்யுள் உருவில் விளக்கனவே சிறன் தனவாகும். எதுகை மோனே முதலிய உரிய உறுப்புக்கள் = பொருங்கி, அருமையாக அமைந்து உணர்வு நலம் ததும்பி என் றும் கினைவில் இருக்கும்படி இனிமையுடன் நிலைத்து வருதலால் கவிகளே உயிர்களுக்கு யாண்டும் உதவி புரிந்து நிற்கின்றன.

அவை அம்புக ஆற்றலுடையன. திவ்விய மகிமை கோய்க் தன. எவற்றையும் அன்பு மணம் கமழ இன்ப கலம் கனிய அவை விளக்கி அருள்கின்றன. உன்னதமான உணர்ச்சிகளை உயிர்களுக்கு ஊட்டி மன்பதையை என்றும் உயர்த்தி வருகின் றன. உத்தமத் தலைமையில் ஒளிபெற்றுள்ளன.

“Poetry is a representation of the ideal.” (Newman)

கவி உயர்ந்த உணர்வுக் காட்சியின் உருவமா யுள்ளது ” என நியூமன் என்னும் ஆங்கிலப் போசியர் கூறியுள்ளார்.

காம் காணுத பொருளைக் கண் எ கிரே காட்டிப் புதிய ஒர் மதிநலத்தை அதி மதுரமாகக் கவி நமக்கு நன்கு ஊட்டுகின்றது. அதன் அருளும் கொடையும் பெருமதிப்புடையன அறி வின் காண்யாகக் கருதி அதனைப் பேணி ஒழுகவேண்டும்.

202. கவியின் சுவையைக் கருத்துான்றி நோக்கின்

அவியின் சுவையும் அயலாம்-புவியிலொரு புத்தமுத மாகிப் பொலியும் அதை நுகர்வார்

சித்தமுத மாவர் சிறந்து. (e–)

இ-ள்

கவியினது சுவையை உள்ளம் ஊன்றி உணரின் அமுகின் சுவையும் இழித்தபோம் ; அது புதிய ஒரு அதிசய அமுகமாய் உயர்ந்து மிளிர்கின்றது ; அதை நுகர்கின்றவர் இனிய உணர்வுரு வங்களாய்ச் சிறந்து விளங்குவர் என்றவாறு.

அவி என்றது தேவர் உணவை. மிகுந்த சுவையும் சிறந்த விரியமும் உடையது ஆதலால் அஃது இங்கு வாைந்து காண வந்தது.

கவியின் சுவை என்றது பாடல்களில் படிந்துள்ள உணர்வு

நலனை. அதனைத் தோய்ந்து நுகருங்கால் உள்ளமும் உயிரும் உவ கையில் ஒங்கி ஒளிர்கின்றமையின் அது சுவை என கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/259&oldid=1324836" இலிருந்து மீள்விக்கப்பட்டது