பக்கம்:தரும தீபிகை 1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி. - 257

இவ்வாறு எவ்வளவோ பேர்களைக் கவிகள் கொண்டுவந்து

காட்டி நமக்கு அறிவின் பங்களை அருளுகின்றன். உயிர்க்கு உறுதியான உயர்ந்த உணர்வு நலங்களை உதவி என்றும் இன்ப கிலையங்களாய்ச் சுவை சாத்து வருகின்ற கவிகளை அனைவரும் கருதிப் பயிலவேண்டும் என்பது கருத்து.

305. உண்ணும் சுவைபோல் ஒழியா துயிரூறி

எண்ணும் தொறும்புதிய இன்பமாய்ப்-பண்ணமைந்த பாட்டிலுறும் அங்தப் பரமசுகம் விண்ணவர்தம் காட்டிலும் உண்டோ வில். (டு)

இ-ள். உண்ணுகின்ற காவின் சுவைபோல் உடனே குன்றி ஒழி யாமல் பாவின் சுவை எண்ணுக்கோலும் புதிது புதிதாய் இன் பம் தழைத்து வருகின்றது ; உயர்ந்த தேவருலகத்திலும் அக்க அரிய இன்ப நலம் இல்லை என்றவாறு,

இது, உண்னும் சுவையும் எண்ணும் சுவையும் கண்ணுறக்

காட்டி ஆன்ம போகத்தின் மேன்மையை விளக்குகின்றது.

அறிவு நலம் கனிக்க அரிய இனிய கருத்துக்கள் கவிகளில் அடங்கியிருக்கின்றன. அவை உயிர்க்கு உறுதி,கருவன. அவற்றின் அருமை பெருமைகளை உணர்ந்து உரிமை செய்துகொள்வார் இருமைப் பயன்களையும் மருவி இன்பம் பெறுகின்ருர். இங்த அறிவானந்தத்தை இழக்கிருப்பது மிகவும் பரிதாபமாகின்றது.

காவில் உண்கின்ற இனிய உணவின் சுவை உடனே ஒழிந்து போகின்றது ; பாவில் உண்கின்ற அரிய அறிவின் சுவை கரு தும் தோறும் புதிய இன்பமாய்ப் பெருகி வருகின்றது.

பண் அமைத்த என்றது இசையோடு அமைந்த அகன் இயல்பு கருதி. அறிவுக்கு உணவான எண்ணங்கள் இனிய இசையுடன் இயைந்து, செவிக்கும் சிந்தைக்கும் இன்பமாய்ச் சங்கம் பொவித்து செங்கமிழ்க் கவிகள் வந்திருக்கின்றன.

“Poetry, we will call musical thought " “ Qama-Gour(s) கலந்த எண்ணங்களை நாம் கவிகள் என்கின்ருேம் ' என மேல் நாட்டுப் பேரறிஞாாகிய கார்லையல் Carlyle சொல்லியிருக்கிரு.ர்.

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/264&oldid=1324841" இலிருந்து மீள்விக்கப்பட்டது