பக்கம்:தரும தீபிகை 1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி. 265

தவத்துற்ை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்ருப் பாலகர் முதியோர் என்னன் இளையோர் என்னுன் கொடுங்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ ? (மணிமேகலை)

எல்லாரும் இறந்து ஒழித்து போவதை நேரே கண்ணுரக் கண்டும் உயிர்க்கு ஒரு கலமும் செய்யாமல் உளம் செருக்கி கிற் கும் மனிதரினும் பெரிய மூடர் எவரும் இலர் என்பதாம்.

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலா அச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும். (அகம், 155)

பிறரை எதிர்பாராமல் தரும நெறி தழுவிவாழும் பெருமை பொருளால் உண்டாம் ; அதனே ஈட்டிக் காத்து சக்து வாழ்க.

இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல தருகிழலும் தண்ணிரும் புல்லும்-ஒருவர் படைத்தனவும் கொள்ளாஇப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே அன்ருே துயர். (கண்டியலங்காரம்.)

எவாையும் பின் சென்று இாந்து கில்லாமல் தானகவே முயன்று பொருளிட்டி மனிதன் புனிதமாக வாழவேண்டும் எனப் புள்ளிமான எடுத்துக்காட்டி இது போதித்துள்ளது.

இன்னவாறே பலவகையான உணர்வு கலங்கள் கவிகளில் அமைந்து உயிர்க்கு உறுதி புரிந்து இனிமை சாந்திருக்கின்றன.

ஆன்ம போகமாய் மேன்மை கனிந்துள்ள இந்த அறிவின் சவைகளை நுகர்ந்து பிறவியின் பயனைப் பெறுதல் வேண்டும்.

210. கலையறிவை மேலோர் கருத்துான்றிப் பேணின்

பலரும் விழைந்து பயில்வார்-தலைமையுளார் பேணு தொழியின் பிழையாய் உலகும்பின்

காணு தொழியும் கழிந்து. (ιδ) இ-ள்

கலைஞானங்களை மேலோர் கருதிப்பேணின் உலகமக்களும்

அதனை உவந்து பயின்று உயர்ந்துகொள்வார்; அவர் பேணுது

ஒழிவாேல் பலரும் அவற்றைக் காணுமல் இழிந்துபோவர் என்க.

$Ꮞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/272&oldid=1324849" இலிருந்து மீள்விக்கப்பட்டது