பக்கம்:தரும தீபிகை 1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 த ரும தீ பி. கை.

மேலோர் என்றது செல்வம் அதிகாரம் முதலியவற்ருல் உயர்ந்து கிற்போரை. உலக நிலையில் சிறந்து கிற்கின்ற இவரைப் பின்பற்றியே பொதுமக்களும் நடந்து வருவர்.

அாசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற படி தலைமையான இவர் கலையறிவைப்போற்றி நல்ல நூல்களை விழைந்து பயின்று புகழ்ந்து பேணி வரின் எல்லாரும் கல்வி நலனே உவந்து கற்று உயர்ந்து திகழ்வர். பெரியாாயுள்ள இவர் கலையை உரிமையுடன் பேணுது ஒழியின் பிறரும் அதனே மதியாது இழிவர்.

“Wit, when neglected by the great, is generally despised by the vilgur. ** (Goldsmith) - -

' கலையறிவைத் தலைமக்கள் பயிலாாாயின் பொது சனங்க ளால் அது இகழப்படுகின்றது ' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு அறிய உரியது.

கலையையும் கலைஞரையும் மேலோர் கருதிப் பேணுவிடின் அங்காடு மூடமாம் : அப் பழியும் பாவமும் தலைமையாளாாய் நிலவியுள்ள தம் கலையிலேயே ஏறுகின்றமையால் அவர் கிலேமை

தெரிந்து நெறி செய்யவேண்டும்.

பண்டு அாசர் விழைந்து பாதுகாத்து வந்த இந்நாட்டுக் கலை ஞானம் இன்று நாதியற்று நிற்கின்றது.

தமிழ்க்கலை தொன்று தொட்டே சிறந்த நிலையில் செழித்து வளர்ந்துள்ளது ; இருந்தும் அதனை உவந்து விழைந்து பயில்வார் பெரும்பாலும் இஞ்ஞான்று குறைந்திருக்கின்றனர். இக்குறை நீங்கிய போது தான் இந்நாடு சிறை நீங்கிச் சிறந்து விளங்கும்.

கம் முன்னேர் தமக்கு வைத்துப் போயுள்ள அரிய கரு ஆலங்களை உரிமையாக உவத்து கொள்ளாமல் நம்மவர் கண்குருடு பட்டுச் சிறுமையாய் ஒதுங்கி உழலுகலைக் கருதும் தோறும் பெரிதும் பரிதாபமாகின்றது.

துங்க யானே முன் படுத்தினும் படுத்துக சுடர்மணிப் பகுவாய்வெம் சிங்கம் வாயிடைச் செலுத்தினும் செலுத்துக தென்புலத் தவர்கோமான் வெங்கண் மாநா கத்திடை வீழ்த்தினும் வீழ்த்துக விடையேறும் எங்கள் நாயக தமிழறி யாருடன் இயம் புதல் தவிர்ப்பாயே. :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/273&oldid=1324850" இலிருந்து மீள்விக்கப்பட்டது