பக்கம்:தரும தீபிகை 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கவி. 267

என்றமைய்ால் இந்நாட்டுத் தலைவர் தமிழ்க்கலையை அங் நாளில் போற்றிவந்துள்ள நிலைமை புலம்ை. ■

அரிய பொருள்கள் அமைந்து இனிய சுவைகள் கிறைந்து விழுமிய கிலேயி ல் விளைந்திருக்கின்ற கவி நயங்களைக் கருதி நகர்த்து உறுதி கலங்களைப் பெறுவதே அரிய பிறவிக்கு உரிய பயனும். பிறந்த பயனை விாைந்து பெறுக.

பூமணி யானே பொன்என எடுத்துத் திங்களும் புயலும் பருதியும் சுமந்த மலைவரும் காட்சிக்கு உரிய ஆகலின் நிறையுடைக் கல்வி பெறுமதி மாங்தர் ஈன்றசெங் கவிஎனத் தோன்றி கனி பரங்து பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும் பெருர்ே வையை வளைநீர்க் கூடல் உடலுயிர் என்ன உறைதரு நாயகன். ' (கல்லாடம்)

கவியின் இயல்பையும், அதனை இயற்றும் கவிஞாது உயர் வையும் கல்லாடர் இங்ானம் வியந்து சொல்லியிருக்கிருர், பூமணி முதலிய மங்கல மொழிகளை முதலில் அமைந்து அரிய சீவகதி போல் இனிய நீர்மை பொலிந்து மனித வுலகம் உய்யக் கவிகள் இனிது உதவி வருகின்றன.என இதில் வந்துள்ளமை காண்க.

இவ் அதிகாரத்தின் தொகைப்பொருள். கவி அரிய காட்சிகளை யுடையது. --- அது அமுகிலும் இனியது. அறிவின்பம் ஆனது. விண்ணையும் மண்ணையும் விளக்கிக்காட்டுவது. சுவர்க்க போகத்திலும் உயர்ந்தது. பேரின்ப நிலையமாய்ப் பெருகி யுள்ளது. அதனைப் பருகினவர் பாவசமாகின்ருர். புண்ணிய சிலாாய்ப் பொலிந்து மிளிர்கின் ருர். கவி நுகர்ச்சி உயிர் உயர்ச்சியாகின்றது. அதனை உவந்து நுகர்ந்தவர் உயர்ந்து திகழ்கின்ருர்.

21-வது கவி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/274&oldid=1324851" இலிருந்து மீள்விக்கப்பட்டது