பக்கம்:தரும தீபிகை 1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்திரண்டாம் அதிகாரம்

கவிஞர்.

அஃதாவது கவிகளை இயற்றி யருளும் புலவர்களுடைய நிலைமை. சிறந்த கலையறிவும் தெய்வக் கிருவருளும் கலந்த பொழுதுதான் உலகில் உயர்ந்த கவிஞர்கள் விளைந்து எழுகின், றனர். கவிகளின் இயல்பை முன்னம் கண்டோம் ; இதில் அவ ற்றை ஆக்கியருளும் அதிபதிகளைக் காண வருகின்ருேம். 311. தாம்கருதி நின்ற தனிக்கருத்தைப் பின் பிந்த

வான்கவிந்த வையமெலாம் வாய்ந்தொளிர-ஊன்கவிங்த

மெய்யுயிர்போல் செய்யுளிடை மேவ அருள்புரிவார்

பொய்யில் புலவர் புனேந்து. (க)

இ-ள். -

தம் உள்ளத்தில் தோன்றிய நல்ல எண்ணங்களை உலகம் எல்லாம் அடைந்து மகிழக் கவிகளுள் பொதிந்து சுவையாகப் புலவர்கள் உதவி வருகின்றனர் என்றவாறு.

இது, கவிஞரின் அதிசய அமைதியை உணர்த்துகின்றது.

உயிர் வருக்கங்களுள் மனித இனம் உயர்ந்து விளங்குகின் றது. அவ்விளக்கம் உணர்ச்சி வலியர்ல் அமைந்தது.அவ்வுணர்வு நலம் கலையறிவுடன் கலந்து புலவரிடம் தலை சிறந்து கிற்கின்றது. ஆகவே அவர் மனிதகோடிகளுள் ஒர் இனிய கனிநிலையாளாய்த் தழைத்து மிளிர்கின்ருர். -

முன்னும் பின்னும் எண்ணி அறியும் தன்மை மிருகங்களு க்கு இல்லை. மனிதரிடமே அது மருவி யுள்ளது. ஆயினும் அக்த எண்ணங்கள் நன்கு வெளிப்படாமல் தம்முள்ளேயே தயங்கி கின்று பொது மக்கள்பால் ஒழிந்து போகின்றன. தம் உள்ளக் கருத்தை உலகம் நலமுற வெளிப்படுத்தி யாண்டும் கிலை நிறுத் தும் வன்மை புலவரிடமே தலைமையாக என்றும் நிலவியுள்ளமை யால் அவரது கிலைமை தெளிவுற வந்தது.

மனிதன் எண்ணங்களால் உயர்கின்ருன்; அவ்வுயர் நலங் களை உயிர்கள் உய்வுற உதவியருள்பவர் எவ்வளவு உயர்ந்தவர் ! அவ்வினைத்திறம் எனைத்துணே வியப்பது? அவருடைய சீர்மையும் நீர்மையும் எத்துணை நிலையின உய்த்துணர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/275&oldid=1324852" இலிருந்து மீள்விக்கப்பட்டது