பக்கம்:தரும தீபிகை 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 த ரு ம தி பி ைக.

அமிர்தம் அரிய சுவையும் பெரிய மகிமையும் உடையது ; உண்டவர்க்கு -மதி இன்பங்களை கெடிது காவல்லது ஆதலால் கல்ல நூலுக்கு அது இங்கு உவமையாய் வந்தது.

எண்ணத் தெவிட்டாத என்றது பயிலுக்தேரறும் புதிது புதிதான சுவைகள் பெருகி உயர்போகமாய் ஒங்கிநிற்கும் பாங்கு தெரிய. கெவிட்டல் = வேண்டாம் என்று வெறுத்தல்.

யாண்டும் இன்ப நிலையமாய்ப் பொங்கி மிளிரும் பண்பு நல முடைய இன் கவி நூல் மன்பதைக்கு என்றும் உவகை நலங்களை விளைத்து உறுதிபுரிந்து வருகின்றது.

வசன வடிவில் நூல்கள் அமையுமாயினும் அவை சிறந்த அணிகலங்கள் அமைந்து உயர்ந்த சுவை வளங்கள் சுரந்து கிரந்

தாமாய் கிலைத்து கில்லா,

வாயால் பாடும்போது இனிய ஒசையும், நாடி ஆயும்போது அரிய பொருளும் மருவியுள்ளமையால் பாட்டு வடிவில் அமைந்த னவே நூல்களாக மேலோரால் பாராட்ட நேர்ந்தன.

அத்தகைய செய்யுள் நால்களைச் செய்ய வல்லவர் திவ்விய கிலையினர். சிவகோடிகளுக்கெல்லாம் அறிவு நலங்களை உணர்த்தி ஆதரவுடன் அருள் புரிந்து மேதகவைேமந்து மிளிர்தலால் அவர் தேவர் என கின்ருர், -

பாவலர் - பாக்களில் வல்லவர். என்றது கவிஞரை.

உருவ கிலையில் மனிதாயினும் உணர்விலும் தகவிலும் உயர்ந்து அரியகிலையில் பெருகி கிற்கின்ற அவரைத் தமர் என விழைத்து அமார் கழுவிக் கொள்கின்றனர்.

தேவர் மனிதரினும் மேம்பட்டவர் ; விசேட அறிவுடைய வர்; புண்ணிய நிலையினர்; காம் எண்ணியபடியே சுயாதீனமாய் யாண்டும் இனிது வாழும் இயல்பினர். அத்தகைய உயர்கலங்கள் உக்கமக் கவிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளன.

புலவர் என்று தேவர்க்கு ஒரு பெயரும் உண்டு. பலவகை கிலைகளிலும் கலை சிறந்து உணர்வொளிமிகுந்துள்ளமையால் கவி களைத் தெய்வங்கள் என்று மேலோர் போற்றி யுள்ளனர்.

“The poets are thus liberating gods. * (Emerson)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/277&oldid=1324854" இலிருந்து மீள்விக்கப்பட்டது